- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval8-12-2024 வளர்பிறை அஷ்டமி வழிபாடு

8-12-2024 வளர்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய வளர்பிறை அஷ்டமி திதி, மிக மிக சக்தி வாய்ந்தது. காரணம் ஞாயிற்றுக்கிழமை என்பது பைரவருக்கு உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30-6:00 மணி வரை ராகுகால நேரம் வரும். அந்த நேரத்தில் பைரவரை வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால், செல்வ வளம் உயரும்.

முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை வேண்டுதலையும் நீங்கள் பைரவர் இடத்தில் வைக்கலாம். நல்ல வேலை கிடைக்க, நல்ல தொழில் துவங்க, செய்யும் தொழில் லாபத்தை கொடுக்க, என்று உங்கள் முன்னேற்றத்திற்கு, அவசியம் என்ன தேவைப்படுகிறதோ, அந்த ஒரு கோரிக்கையை நாளைய தினம் பைரவரிடம் நீங்கள் வைத்து வழிபாடு செய்யலாம். இது பொதுப்படையான விஷயம். பெரும்பாலும் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும். இது தவிர செல்வ வளம் அதிகரிக்க நாளை தினம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

வைரவருக்கு உகந்தது என்றால் புனுகு. புனுகு வாசத்திற்கு பைரவர் உடனடியாக மயங்கி விடுவார். தரமான ஒரு புனுகு டப்பா வாங்கிக் கொள்ளுங்கள். எலுமிச்சம்பழம் 1 இந்த இரண்டையும் வாங்கி, பைரவர் சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். கூடவே செவ்வரளி பூக்கள் வாங்கி எடுத்துக்கொண்டு சென்று, பைரவருக்கு அந்த மாலையை சாற்றலாம். ரொம்ப ரொம்ப நல்லது.

எலுமிச்சம் பழத்தையும், புனுகையும் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இரண்டு பொருளையும் பைரவர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தரும்படி சொல்லுங்கள். உங்கள் பெயர் நட்சத்திரம் கோத்திரம் அனைத்தையும் சொல்லி பைரவருக்கு அர்ச்சனை செய்து, நீங்கள் கொடுத்த அந்த புனுகு எலுமிச்சம்பழம் இரண்டையும் மீண்டும் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பவும். இந்த வழிபாட்டை நாளைய தினம் ராகு கால நேரத்தில் செய்வது மிக மிக சிறப்பு.

- Advertisement -

இப்படி கோவிலுக்கு செல்லும்போது பைரவருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றலாம். சரி இப்போது வாங்கி வந்த புனுகையும் எலுமிச்சம் பழத்தையும் என்ன செய்வது. வீட்டிற்கு கொண்டுவந்து பூஜை அறையில் வைத்து, அந்த எலுமிச்சம் பழத்தை பைரவராக பாவித்து கொள்ளுங்கள். அந்த புனுகை எடுத்து, அந்த எலுமிச்சை பழத்தின் மேல் தடவி, எலுமிச்சம் பழத்தை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து, உங்கள் நிலை வாசல் படியில் கட்டி விடுங்கள்.

48 நாட்களுக்கு இந்த எலுமிச்சம் பழம் அப்படியே உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இருக்கட்டும். உங்கள் வாழ்வில் இருந்து வந்த அத்தனை பணம் சம்பந்தப்பட்ட கஷ்டமும், வருமானம் சம்பந்தப்பட்ட கஷ்டமும் படிப்படியாக விலகும். வீட்டில் இருக்கும் கடன் தானாக வெளியே ஓடிவிடும். வீட்டிற்குள் வருமானம் வந்த வண்ணம் இருக்கும். இந்த எலுமிச்சம்பழம் முடிச்சை கட்டும் போது, பைரவர் எங்கள் வீட்டு காவல் தெய்வமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும் சிவ மந்திரம்

48 நாள் கழித்து, முடிச்சை கழட்டி ஓடும் நேரில் அல்லது ஊருக்கு ஒதுக்கப்புறமாக கால் படாத இடத்தில் போட்டு விடவும். வீட்டிற்குள் செல்வ வளத்தை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் பைரவா என்று பிரார்த்தனை செய்து நம்பிக்கையுடன் கட்டினால், நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்