- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்1 கப் கேழ்வரகு மாவு இருக்கா? ஆரோக்கியமான நல்ல டேஸ்டியான பக்கோடா இப்படி செஞ்சா சுவையாகவும்...

1 கப் கேழ்வரகு மாவு இருக்கா? ஆரோக்கியமான நல்ல டேஸ்டியான பக்கோடா இப்படி செஞ்சா சுவையாகவும் இருக்குமே! நேரம் இருந்தால் இன்னிக்கே செஞ்சு பாருங்க.

- Advertisement -

கடலை மாவை கொண்டு செய்யப்படும் வெங்காய பக்கோடாவை அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இப்படி ஆரோக்கியமான முறையில் கேழ்வரகு மாவு கொண்டு செய்யப்படும் ஒரு பக்கோடாவை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? வீட்டில் இருக்கும் குறைந்த பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமாக செய்து விடக் கூடிய இந்த கேழ்வரகு பக்கோடா ஆரோக்கியத்துடன், அட்டகாசமான ருசியையும் கொடுக்கும். எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கேழ்வரகு பக்கோடாவை நீங்களும் எப்படி செய்வது? என்று தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கேழ்வரகு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – 200 கிராம், கடலை மாவு – மூன்று டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெறும் மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – இரண்டு, முருங்கை இலை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கேழ்வரகு பக்கோடா செய்முறை விளக்கம்:
கேழ்வரகு பக்கோடா செய்வதற்கு முதலில் 200 கிராம் அளவிற்கு கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த பக்கோடா செய்வதற்கு பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அரை டீஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள் அல்லது ரெண்டு பச்சை மிளகாய்களை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்த பின்பு பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பக்கோடா ரொம்பவும் சுவையாக இருக்க ஒரு கைப்பிடி அளவிற்கு உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

முருங்கை இலை இல்லை என்றால் அதற்கு பதிலாக நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கலாம். கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு பக்கோடா மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலந்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் அஞ்சே நிமிஷத்துல டீக்கடை இனிப்பு போண்டாவை சூப்பரா நம்ம வீட்டில அதே டேஸ்ட்டோட செய்யணுமா? அப்படின்னா இப்படி செய்து பாருங்க டீக் கடை போண்டா செய்முறை டிப்ஸ்.

எண்ணெய் சூடாகியதும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிய உருண்டைகளாக பிடித்து உதிர்த்து விடுங்கள். எல்லா பக்கமும் ஒன்று போல நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு பக்கோடா ரெசிபி, மிகுந்த ஆரோக்கியம் மிக்கதும் கூட என்பதால் அடிக்கடி இதை செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டில் ஒன்றுகூட மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். நீங்களும் இதே மாதிரி உடனே ட்ரை பண்ணி அசத்திடுங்க!

சற்று முன்