உப்புமா என்றாலே பலருக்கும் அலர்ஜி தான், ரவையை வைத்து செய்யும் உப்புமா,கிச்சடியாவது ஓரளவுக்கு சாப்பிட்டு விடுவார்கள். இந்த சேமியாவில் செய்யும் உப்புமாவை குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு இந்த உப்புமா மீது குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் அதே சேமியாவை இந்த முறையில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் செய்து கொடுத்து பாருங்கள். இனி எப்போ இருந்த மாதிரி செஞ்சு தருவீங்கன்னு குழந்தைகள் காத்துகிட்டு இருப்பாங்க. இப்ப இந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் : வறுத்த சேமியா -1 கப், வெங்காயம் – 2, தக்காளி -1, பச்சை மிளகாய் -3, கேரட், பீன்ஸ், பட்டாணி,குடைமிளகாய், – 1/4 கப், முந்திரி – 10, வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், கடுகு-1 டீஸ்பூன், உளுந்து – 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 பின்ச், உப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை -10, மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், சக்கரை – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
இந்த சேமியா உப்புமா செய்வதற்கு முதலில் காய்கறிகளை சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் அரிந்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை கொஞ்சம் மீடியம் சைஸில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது சேமியா உப்புமாவை தாளித்து விடலாம். அதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், முந்திரி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வறுக்கும் போது அடுப்பை லோ பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடுகு, உளுந்தம் பருப்பை போட்டு பொரிந்த உடன் கடலைப் பருப்பை சேர்த்து அதுவும் சிவந்தவுடன், பெருங்காயம் ஒரு பிஞ்சை சேர்த்த பிறகு வெங்காயத்தையும், பச்சை மிளகாயும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இவை கண்ணாடி பதம் வரை வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து அதையும் வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு கேரட், பீன்ஸ், காய் வகைகளை சேர்த்து அத்துடன் அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். சர்க்கரை சேர்க்கும் போது காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்கும். மூன்று நிமிடம் வரை காய்கறிகள் இந்த வெங்காயம், தக்காளியுடன் வேகட்டும். அதன் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் சேமியாவிற்கு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதிக்கும் போது எடுத்து வைத்த சேமியாவை சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் சுண்டி நல்ல உதிரி உதிரியான பூப்போல சேமியா உங்களுக்கு தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே: சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா இந்த தக்காளி தயிர் கிரேவிய செஞ்சி பாருங்க, அப்புறம் எப்ப சப்பாத்தி செஞ்சாலும் இது தான் சைடிஷா இருக்கும். அசைவம் கூட வேண்டாம் என்று சொல்லிடுவீங்க.
இந்த முறையில் செய்து கொடுக்கும் போது சேமியா வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு இது சுவையாக இருக்கும். இத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் போது அவ்வளவு பிரமாதமாக இருக்கும் இன்றை உங்களுக்கு.