- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இட்லி, பொங்கல், சப்பாத்தி, தோசைக்கு மட்டும் இல்லைங்க சாதத்துக்கு கூட சிறு பருப்பு சாம்பார் ஆரோக்கியமான...

இட்லி, பொங்கல், சப்பாத்தி, தோசைக்கு மட்டும் இல்லைங்க சாதத்துக்கு கூட சிறு பருப்பு சாம்பார் ஆரோக்கியமான முறையில், அருமையான சுவையில் பத்தே நிமிடத்தில் இப்படியும் தயாரிக்கலாமே!

- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள சரியான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த சிறு பருப்பு சாம்பார் டிபன் வகைகளுக்கு மட்டும் அல்லாமல் சுடச்சுட சாதத்துடனும் பிசைந்து சாப்பிட்டால் ரொம்பவே ருசியாக இருக்கும் தெரியுமா? சுலபமாக செய்யக்கூடிய இந்த சிறு பருப்பு சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வண்ணம் நிச்சயம் இருக்கும். சுவையான ஆரோக்கியமான சிறு பருப்பு சாம்பார் ரெசிபி எப்படி எளிதாக செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சிறு பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 15, பெரிய தக்காளி – ரெண்டு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, சாம்பார் தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சிறு பருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
100 கிராம் சிறு பருப்பை நன்கு கழுவி களைந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்தால் தான் இந்த சாம்பார் ரொம்பவே ருசியாக இருக்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.

ஊற வைத்த பருப்பை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள்.

- Advertisement -

தாளித்ததும் நீங்கள் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் தோலுரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். வெங்காயம் சுருள வதங்கி வரும் பொழுது தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி மசிய வதங்கி வரும் பொழுது நீங்கள் சாம்பார் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
காரசாரமான தக்காளி சட்னி செய்ய இந்த 3 பொருள் இருந்தால் போதுமே! சோம்பேறி தக்காளி சட்னி எப்படி நொடியில் அரைப்பது?

பின்னர் நீங்கள் குழைய வேக வைத்து எடுத்துள்ள பருப்பை நன்கு மசித்து இதனுடன் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சாம்பார் எந்த அளவிற்கு உங்களுக்கு தேவையோ, அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சாம்பார் கொதித்து வரும் வேளையில் நீங்கள் அடுப்பை அணைத்து விடுங்கள். கொஞ்சம் போல் கொத்தமல்லியை நறுக்கி தூவி கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த சிம்பிள் சிறுபருப்பு ஆரோக்கியமான சாம்பாரை நீங்கள் இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சுடச்சுட சாதத்துடனும் சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சற்று முன்