- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபுருவம், இமை முடி 2 வாரத்திலேயே அடர்த்தியாக பொம்மை போல நீண்டு வளர இந்த எண்ணெய்...

புருவம், இமை முடி 2 வாரத்திலேயே அடர்த்தியாக பொம்மை போல நீண்டு வளர இந்த எண்ணெய் தான் தேய்க்கணுமா? இது தெரியாம போச்சே!

- Advertisement -

புருவம் மற்றும் இமை முடி அடர்த்தியாக இருக்கும் பொழுது தான் நம்முடைய முகம் பளிச்சென்று அழகாக தெரிகிறது. அதிக மேக்கப் இல்லாமலேயே நமக்கு அழகாக காட்டக்கூடிய இந்த இரண்டு இடங்களில் இருக்க வேண்டிய அளவிற்கு முடி இல்லை என்றால் முக அழகு குறைந்து விடுகிறது. புருவம் மற்றும் இமை முடி அடர்த்தியாகவும், நீண்டு பொம்மை போல வளரவும் இந்த எண்ணெயை தடவினால் போதும். இரண்டு வாரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். அது என்ன எண்ணெய்? எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருக்குமே தன்னுடைய புருவம் கருகருவென்று அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். அப்பொழுது தான் த்ரெட்டிங் செய்யும் பொழுது எந்த டிசைனில் வேண்டுமானாலும், நாம் விரும்பியபடி செய்து கொள்ள முடியும். சிலருக்கு வில் போல வளைந்த புருவம் பிடிக்கும். சிலருக்கு நேராக அடர்த்தியாக இருக்கக்கூடிய புருவம் பிடிக்கும். சிலருக்கு மெல்லியதாக நீளமாக இருக்கக்கூடிய புருவம் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் விருப்பமான புருவ அமைப்பை உருவாக்கிக் கொள்வதற்கு முதலில் புருவத்தில் நிறைய முடி இருக்க வேண்டும்.

- Advertisement -

அதே போலத் தான் இமை முடியும்! கண் இமைகளில் அடர்த்தியாக கருகருன்னு நீளமாக முடி இருக்கும் பொழுது பார்ப்பதற்கு அழகாக தெரியும். கண்களை சிமிட்டும் பொழுதெல்லாம் நாம் அழகாக இருப்பதாக உணர முடியும். இந்த இமைமுடி மற்றும் புருவம் அடர்த்தியாக வளர முதலில் ஒரு சிறிய அளவிற்கு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு விளக்கெண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை உடைத்து ஊற்றுங்கள். இது எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பட்ஸ் அல்லது மெல்லிய பஞ்சில் நனைத்து புருவம் மற்றும் இமை மூடிகளில் தடவி விடலாம். சரியாக இதில் தடவி விட முடியவில்லை என்பவர்கள், மஸ்காரா போட பயன்படுத்தும் குச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் இந்த எண்ணெயை தடவி புருவம் மற்றும் இமை முடிகளில் அப்ளை செய்து கொள்ளலாம். கண்களுக்குள் படாமல் கண்களை சுற்றி இருக்கும் மேல் முடி, கீழே இருக்கும் சிறு சிறு முடிகளில் கூட நீங்கள் தடவி கொள்ள வேண்டும். இரவு தடவி, இரவு முழுவதும் ஊற விட்டு விடலாம். மறுநாள் காலையில் நீங்கள் குளிக்கும் பொழுது அதுவே போய்விடும். இப்படி தொடர்ந்து ரெண்டு வாரம் செய்து வந்தால் இமை முடி அடர்த்தியாக வளர துவங்கும்.

இதையும் படிக்கலாமே:
1 நிமிடத்தில் வெள்ளையாக உங்களுக்கு ஆசையா? தேங்காய் பால் மாதிரி அப்படி ஒரு வெள்ளையான, கொள்ளை அழகைப் பெற இந்த 1 பொருள் போதும்.

இமை முடி மட்டுமல்லாமல் புருவமும் நன்கு அடர்த்தியாக புதிய முடிகள் முளைத்து வளர துவங்கும். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் இந்த மூன்று எண்ணெய்கள் மட்டும் அல்லாமல், இதனுடன் நீங்கள் ஜெல் கன்சிஸ்டெண்சி வருவதற்கு ஆலிவ் வேரா ஜெல் 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பயன்படுத்தலாம். கற்றாழை இன்னும் வேகமாக நம்முடைய முடியை வளர்ச்சியடைய செய்யக்கூடிய அற்புதமான மூலிகையாகும். எனவே எண்ணெயாக பயன்படுத்தாதவர்கள், இந்த ஜெல்லுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொண்டால் ஜெல் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சற்று முன்