- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மனமனக்கும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்....

மனமனக்கும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். 3 விசில் போதும். ஆளை தூக்கும் வாசனையில் சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார்.

- Advertisement -

நாளைக்கு காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்கு சுவையாக, சிம்பிளாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கை கொடுக்கும் ரெசிபி இந்த கொங்கு நாட்டு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமான முறையில் இந்த அரிசி பருப்பு சாதத்தை பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

ஒரு டம்ளர் அளவு சாப்பாட்டு அரிசிக்கு, 1/4 டம்ளர் அளவு துவரம் பருப்பு சரியாக இருக்கும். ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி அரிசி பருப்பு கணக்கு எடுப்பார்கள். சில பேர் 1 டம்ளருக்கு, 1/2 டம்ளர் அளவு பருப்பு கூட சேர்ப்பார்கள் அது உங்களுடைய விருப்பம். அரிசியையும் பருப்பையும் ஒரே பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சாதத்திற்கு ஸ்பெஷலான ஒரு மசாலா அரைக்க வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். சீரகம் – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, மிளகு – 10, சோம்பு – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, வரமிளகாய் – 1, வர மல்லி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக இதை அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலா அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், வர மிளகாய் இரண்டாக கிள்ளியது – 3 லிருந்து 4, சின்ன வெங்காயம் நறுக்கியது – 10 லிருந்து 15 போட்டு போட்டு நன்றாக வதக்க வேண்டும். கருவேப்பிலை – 1 கொத்து போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கொரகொரப்பான மசாலாவை இதில் போட்டு ஒரு நிமிடம் போல பச்சை வாடை போக வதக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து மீடியம் சைஸில் இருக்கும் – 2 தக்காளி பழங்களை நறுக்கி போட்டு, தேவையான அளவு – உப்பு போட்டு, வதக்குங்கள். இந்த இடத்தில் 1/4 ஸ்பூன் – மஞ்சள் தூள், சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கி விட்டு, 2 1/2 கப், அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 கப் சாதம், 1/4 கப் துவரம் பருப்பு அல்லவா இதற்கு 2 1/2 கப் அளவு தண்ணீர் போதுமானது.

இதையும் படிக்கலாமே: தக்காளி தொக்கு இப்படி செஞ்சி பாருங்க. ஒரு மாசம் ஆனாலும் கெட்டே போகாது. இட்லி தோசை சாதம் எல்லாத்துக்கும் வெச்சி சாப்பிட செம்மையா இருக்கும்.

தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி பருப்பை போட்டு மீண்டும் நன்றாக கலந்து, கொதி வந்ததும் உப்பு தேவைப்பட்டால் போட்டு, கலந்து விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் மூன்று விசில் விட்டால் சரியான பக்குவத்தில் அரிசி பருப்பு சாதம் கமகமன்னு வெந்து கிடைக்கும்.

பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து மேலே 1 ஸ்பூன் – நெய், விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கலந்து பரிமாறி பாருங்கள். சுவையும் வாசமும் உங்களுக்கே தெரியும். லஞ்ச் பாக்ஸில் இந்த சாப்பாட்டை கட்டிக் கொடுத்தால் ஒரு பருக்கை கூட மிச்சம் வரவே வராது. ரெசிபி பிடிச்சிருந்தா. ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்