- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வெறும் அஞ்சு ரூபாய் செலவில் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை கை வலிக்க தேய்க்காமல்...

வெறும் அஞ்சு ரூபாய் செலவில் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை கை வலிக்க தேய்க்காமல் பளிச்ன்னு மாத்திடலாம். இதை ட்ரை பண்ண பிறகு உங்க பாத்ரூம் டைல்ஸ் புதுசா போட்ட டைல்ஸ் மாதிரி பளப்பளன்னு மின்னும்.

- Advertisement -

நாம் என்ன தான் வீட்டின் மற்ற இடங்களை சுத்தம் செய்தாலும் இந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வது கொஞ்சம் அல்ல ரொம்பவே கடினமான வேலை தான். இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து இடத்திலும் உப்புத் தண்ணீர் தான். இதனால் நாம் என்ன தான் சுத்தம் செய்தாலும் கூட பாத்ரூம் டைல்ஸ் அதிகமாக உப்பு கறை படிந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இந்த ஒரு டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும் எவ்வளவு உப்பு கறை படித்த பாத்ரூம் டைல்ஸ்சும் பளிச்சுன்னு சுத்தம் செஞ்சிடலாம். வாங்க அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உப்பு கறை படிந்த பாத்ரூமில் சுத்தம் செய்வது எப்படி
இப்போது உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வதற்கு ஒரு லிக்வீடை நாம் வீட்டில் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சீயக்காய் பவுடர் பாக்கெட், ஒரு ஷாம்பு பாக்கெட், ரெண்டு டேபிள் ஸ்பூன் புளித்த தயிர். தயிர் இல்லாத பட்சத்தில் வீட்டில் ஒலித்த இட்லி மாவு இருந்தால் அதையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சீயக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வீட்டில் அரைத்த சீயக்காய் தூள் இருந்தால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் ஷாம்பு தயிர் அல்லது இட்லி மாவு அனைத்தையும் கலந்த பிறகு நன்றாக அடித்து கொள்ளுங்கள். இது நல்ல ஒரு லிக்விட்காக கிடைத்து விடும்.

இப்போது உப்பு கறை படிந்த இடத்தில் எல்லாம் இந்த லிக்விடை லேசாக எடுத்து தேய்த்து விடுங்கள. 10 நிமிடம் வரை இந்த லிக்விட் அந்த கறையின் மீது அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து ஸ்டீல் ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். இப்படி தேய்த்த பிறகு பல வருடமாக பிடித்திருந்த உப்பு கறையாக இருந்தாலும் பளிச்சென்று மாறி விடும். இதை நீங்கள் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. ஸ்டீல் ஸ்டப்பர் இல்லை என்றால் உப்பு காகிதம் இருந்தால் அதை வைத்தும் தேய்க்கலாம்.

இனி பாத்ரூம் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கை வலிக்க தேய்த்து தான் சுத்தப்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்த ஒரு லிக்விட் உங்களிடம் இருந்தால் போதும் உங்களின் பாத்ரூம் நிமிடத்தில் பளிச்சென்று மாறி விடும். இனி பாத்ரூம் சுத்தம் செய்ய ஒருநாள் முழுவதும் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டியதே இல்லை.

சற்று முன்