வெளியே சென்று விட்டு வெயிலில் வீட்டிற்குள் நுழைந்த உடன், ஃப்ரிட்ஜை திறந்து அதன் உள்ளே இருக்கும் ஐஸ்தண்ணீரை எடுத்து கடகட என்று குடித்து விடுவோம். இது உடலுக்கு பெரிய ஆபத்து. சிறுநீர் பிரச்சனை வர, உடல் சூடு பிடிக்க முதல் காரணம் இதுதான். வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கவே கூடாது. அடிக்கிற வெயிலுக்கு தினமும் தண்ணீரை முறைப்படி எப்படி குடிப்பது என்பதை பற்றிய ஒரு பயனுள்ள வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் நோய் தொற்றும் ஏற்படாது. உடல் சூடு பிடிக்காது. உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். அது என்ன தண்ணீர் தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறதா? நம்ம முன்னோர்கள் குடித்த தண்ணீர் தாங்க இது. சமீப காலமாக மறந்து விட்டோம். வாங்க அதை திரும்பவும் நினைவு கூறுவோம்.
வெயில் காலத்திற்கு தண்ணீர் குடிக்கும் சரியான முறை:
ஒரு பத்து லிட்டர் பிடிக்கும் அளவுக்கு பானை வாங்கி அதில் மண் வாசம் போக சுத்தம் செய்து கொள்ளுங்கள். உள்ளே இரண்டு மூன்று நாட்களுக்கு அரிசி கலைந்த தண்ணீரை ஊற்றி, ஊற வைத்து அந்த மண்பானையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு இரவு அந்த பானை முழுவதும் தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வெள்ளை காட்டன் துணியில் நறுக்கிய வெட்டிவேர் 2 ஸ்பூன் அளவு, தோற்றான் கொட்டையில் 4 லிருந்து 5, வைத்து அந்த வெள்ளை துணியை சிறிய முடிச்சாக கட்டி பானைக்குள் தண்ணீரில் போட்டு விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தையும் எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். (பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வைக்கும் வாட்டர் பியூரி செய்யக்கூடிய வேலையை இந்த தோற்றான் கொட்டை செய்யும்).
மறுநாள் காலை அந்தப் பானை தண்ணீர் சும்மா ஜில்லுனு குளுகுளுன்னு இந்த 3 பொருட்களின் வாசத்தோட சூப்பரா இருக்குங்க. மூன்று பானை தண்ணீருக்கு இந்த பொருட்களை மாற்ற வேண்டாம். மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று பானை தண்ணீர் தீர்ந்து விட்டால், இந்த பழைய பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் புதிய பொருட்களை அந்த பானை தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும். (இந்த மூன்று பொருட்களை மூன்று முறை மீண்டும் மீண்டும் தண்ணீரில் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்).
எலுமிச்சம் பழமும் வெட்டிவேரும் தண்ணீரில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. தோற்றான் கொட்டை என்பது தண்ணீரில் இருக்கும் கிருமியை அழிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய கொட்டை. தண்ணீரை நன்றாக தெளிவாக மாற்றி நமக்கு தரும். ஆர்வோ வாட்டர் செய்யக்கூடிய வேலையை இந்த தோற்றான் கொட்டை செய்யும் என்று சொல்லுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் இந்த கொட்டை கிடைக்கும். அவ்வளவு காசு எல்லாம் கிடையாது. நாம் எல்லோரும் காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு மலிவான விலையில் கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.
வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வாரத்திற்கு தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள். சிறுநீர் போவதில் பிரச்சனையே இருக்காது. சிறுநீர் தொற்று ஏற்படாது. வெயில் காலத்தில் உடல் சூட்டினால் ஏற்படும் நோய் வாய் பிரச்சனையில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம். இந்த வெயில் காலத்திற்கு எளிமையான இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருக்கா நாளைக்கே போய் பேரம் பேசாமல் ஒரு மண்பானையை வாங்கி இதை நிச்சயம் ட்ரை பண்ணி பாக்குறீங்க. உடல் ஆரோக்கியம் வெயில் காலத்தில் ரொம்ப ரொம்ப முக்கியம். குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.