- Advertisement -
Homeஜோதிடம்இந்த 5 ராசிகாரர்களுக்கு ஆரமித்தது குரு சண்டாள யோகம் - இனி இவர்களுக்கு பல மாற்றங்கள்...

இந்த 5 ராசிகாரர்களுக்கு ஆரமித்தது குரு சண்டாள யோகம் – இனி இவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்

- Advertisement -

அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த 2023 ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சி கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கின்ற ராகு பகவானுடன், குரு பகவான் சேர்ந்துள்ளதால் தற்போது “குரு சண்டாள யோகம்” சில ராசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரை இந்த குரு சண்டாள யோகம் (Guru sandala yogam 2023) இந்த ராசிகளுக்கு நீடிப்பதால், என்னென்ன பலன்களை இந்த ராசியினர் பெறுகிறார்கள் என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வரை குரு சண்டாள யோகம் நடைபெறுவதால் எந்த ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பாகவும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். பொருளாதார நிலையில் சற்று ஏற்ற – இறக்கங்கள் இருக்கும். பிறர் எதைப்பற்றி பேசினாலும் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள் என்கிற ரீதியில் எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற கவலைகள் இருக்கும்.

- Advertisement -

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் எந்நேரமும் வருமானத்தைப் பற்றியே சிந்தித்து மன நிம்மதியை கெடுத்துக் கொள்வார்கள். எந்த ஒரு விடயத்திலும் திருப்தியற்ற நிலை இருக்கும். சிலருக்கு அவ்வப்போது சிறு, சிறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். எடுக்கின்ற முயற்சிகளில் ஏதாவது ஒரு வகையில் தடை, தாமதங்கள் உண்டாகும். சிலருக்கு நண்பர்களே எதிரிகளாக மாறும் நிலையும் ஏற்படும். ஆனாலும் இவை அனைத்தும் அக்டோபர் 30ஆம் தேதி வரை தான்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் சாதகமான வீட்டில் பெயர்ச்சியாகி இருந்தாலும், அடுத்த ஆறு மாதம் காலம் வரை குரு சண்டாள யோகம் நடைபெறுவதால் அனைத்திலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார ரீதியில் வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும், எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். பிறருடனான பண விவகாரங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

- Advertisement -

புதிய தொழில், வியாபார முதலீடுகளை ஆறு மாதத்திற்கு மேல் ஒத்தி வைப்பது தான் நல்லது. குடும்பத்தினருடன் சிறு சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக நடந்து கொள்வார்கள். பெண்கள் வழியில் சிலர் அவப்பெயர்களை சம்பாதிக்க நேரலாம். வீட்டில் சுப காரிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குரு பெயர்ச்சியால் உருவாகி இருக்கும் குரு சண்டாள யோகத்தால் அக்டோபர் 30 தேதி வரை இந்த ராசியினருக்கு சோதனையான காலமாகவே இருக்கும். எதிர்பார்த்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாது. தொழில் வியாபாரம் நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால், உடற் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.

- Advertisement -

பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதை அறவே தவிர்க்க வேண்டும். வீட்டில் பெரியோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணி மாறுதல் உத்தரவு கிடைக்கலாம். வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனம் தேவை.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குரு பெயர்ச்சியால் பெரும்பாலும் நன்மையான பலன்கள் ஏற்படும் என்றாலும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை குரு சண்டாள யோகம் நடைபெறுவதால் நன்மை தீமை கலந்த பலன்களை பெறுவார்கள். எந்த ஒரு செயலிலும் பல முயற்சிகளுக்குப் பிறகு தான் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு இருந்தாலும், அதற்கேற்றார் போல செலவுகளும் இருக்கும்.

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் பகை ஏற்பட்டு, பிரியும் நிலை ஏற்படும். பொன், வெள்ளி போன்ற ஆபரண சேர்க்கை ஏற்படும் என்றாலும் சில அவசர தேவைகளுக்கு அதை அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி இல்லாமல் தான் பணி செய்வார்கள். கலைஞர்களுக்கு சராசரியான வாய்ப்புகளே கிடைக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு தற்போது ஏற்பட்டுள்ள குரு பெயர்ச்சி ஏற்கனவே பாதகமான நிலையில் இருந்தாலும், அக்டோபர் மாதம் இறுதி வரை குரு சண்டாள யோகம் வேறு நடைபெறுவதால் பல சிக்கல்களை சந்திக்கும் நிலை இருக்கும். மனதில் குழப்பமான நிலை நீடிக்கும். பிறருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு சோம்பல் தனம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்கள் பதவிஉயர்வு பெறுவதில் தடை ஏற்படும்.

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் எதிர்பாராத நஷ்டத்தை சந்திக்க நேரலாம். பெண்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் பொழுது எதிலும் எச்சரிக்கை தேவை.

சற்று முன்