ஒரு சிலரைப் பார்த்தால் நல்ல நிறமாக அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் முகம் முழுவதும் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் திட்டு திட்டாக வந்திருக்கும். சிலருக்கோ முகம் முழுவதும் முகப்பரு வந்து அந்த இடங்கள் கண்ணி போய் பார்க்கவே நன்றாக இருக்காது. கலரா இருந்தாலுமே கூட முகம் இந்த அளவுக்கு மோசமாக இருந்தால் நன்றாக இருக்காது தானே. அதை சுலபமாக சரி செய்ய ஒரு அருமையான குறிப்பை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முகம் பொலிவாக மாற மாதுளை தோல் பேஸ் பேக்
இந்த பேக்கை தயார் செய்ய நமக்குத் தேவையான முக்கியமான பொருள் மாதுளை பழத் தோல் தான். மாதுளை பழங்களை தினமும் உண்டு வரும் போது முகம் நல்ல பொலிவாகவும் நிறமாகவும் மாறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த மாதுளை தோலும் அந்த அளவு முகத்திற்கு பயனை தரக் கூடியது தான். அதை வைத்து தான் இப்போது இந்த பேக்கை நாம் தயாரிக்க போகிறோம்.
ஒரு மாதுளை பழத்தை உரித்து அதன் தோலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தோலை காய வைத்து பவுடர் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை முதலில் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ரெண்டு ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து நல்ல மைய அறுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு ஏர்டைட் கண்டெய்னர் பாக்ஸில் போட்டு ப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது எடுத்து வைத்த பேஸ்டிலிருந்து ரெண்டு ஸ்பூன் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் டீஸ்பூன் காபி பவுடர் அரை ஸ்பூன் சுத்தமான தேன் இதை சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தை சுத்தமாக அலம்பிய பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு இதை முகத்தில் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு உங்கள் கைகளால் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். முகத்தில் அதிகமான முகப்பரு உள்ளவர்கள் இந்த மசாஜ் முறையை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
அதன் பிறகு இந்த பேக்கை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். குளிர்ந்த நீர் ஒற்றுக் கொள்ளாது என்பவர்கள் சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி கொள்ளலாம். இந்த பேக்கை முதலில் போடும் பொழுது ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து போடுங்கள். அதன் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள், இதை வாரம் ஒரு நாள் என இப்படி படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாரம் ஒருமுறை இதை போட்டால் போதும் முகம் பொலிவாக மாறும்.
முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து போடும் போதே உங்களது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் முகப்பரு எல்லாம் மறைந்து முகம் நல்ல பொலிவாக மாறி, உங்க தோல் நிறம் மாறி நல்ல கலராகவும், அழகாகவும் மாறி விடும். இந்த சிம்பிளான பேக்கை நீங்களும் ட்ரை பண்ணி முகத்தை அழகாக மாற்றிக் கொள்ளலாம்.