- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடிவில்லா முடி வளர்ச்சியைப் பெற தலைமுடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தேயுங்க போதும். எவ்வளவு வழுக்கையான...

முடிவில்லா முடி வளர்ச்சியைப் பெற தலைமுடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தேயுங்க போதும். எவ்வளவு வழுக்கையான தலையிலும் கடகடன்னு முடி வளர தொடங்கிடும்.

- Advertisement -

தினமும் ஒரு அழகு குறிப்பை தலை முடி பிரச்சனைக்காக பார்த்து படித்து அதை முயற்சி செய்து வந்தாலும், முடி வளர்ந்தபாடாக இல்லை. தலை முடி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி என்று கேட்பவர்களுடைய சந்தேகத்திற்கு பதிலையும் இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கூடவே சேர்த்து தலை முடி வளர்ச்சிக்கு ஒரு எண்ணெயை எப்படி தயார் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். சில பேர், சில குறிப்பை தொடர்ந்து பத்து நாட்கள் கூட பயன்படுத்த மாட்டார்கள். அதற்குள் அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என்று அந்த அழகு குறிப்பை நிறுத்தி விடுவார்கள். பத்து நாட்களில் நம்மால் எந்த ரிசல்டையும், எந்த அழகு குறிப்பிலும் எதிர்பார்க்க முடியாது.

எந்த அழகு குறிப்பாக இருந்தாலும் அதற்கான ரிசல்ட் கிடைக்க மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் எடுக்கும். ஆகவே பத்து நாட்களில் முடி வளரவில்லை பத்து நாட்களில் முடி உதிர்வு நிற்கவில்லை என்று குறிப்பை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு குறிப்பை தொடர்ந்து பின்பற்றி பார்க்கும் போது தான் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். முடி பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை தரும், ஒரு ஹேர் ஆயில் அழகு குறிப்பை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

சில பேர் இப்படி ஹேர் ஆயில் தயார் செய்து பயன்படுத்தி வருவார்கள். ஆனால் 10 நாட்களில் முடி உதிர்வு நிற்கவில்லை என்று வேறொரு குறிப்புக்கு தாவி விடுவார்கள். அப்படி செய்யாதீங்க. மூன்று மாதம் தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கும் போது தான் நல்ல ரிசல்ட்டை பெற முடியும்.

செம்பருத்தி பூ எண்ணெய் தயார் செய்யும் முறை:
இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து ஒரு ஊட்டச்சத்து தரும் தேங்காய் எண்ணெயை தான் தயார் செய்யப் போகின்றோம். 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெய்க்கு பின் சொல்லக் கூடிய அளவுகள் சரியாக இருக்கும். செம்பருத்திப்பூ 25, வெந்தயம் 5 ஸ்பூன், மருதாணி இலை 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 4 கொத்து, செம்பருத்தி பூ இலை 15, இந்த பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயை காய்ச்ச இரும்பு சட்டியை எடுத்துக்கோங்க. அதில் முதலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நாம் சொல்லி இருக்கும் இந்த பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு அடுப்பில் வைத்து காய விடுங்கள். மிதமான தீயில் தேங்காய் எண்ணெய் சூடாகி காயட்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் எண்ணெய் சூடாகி வரும்போது இந்த பொருட்கள் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கட்டும். (ஆனா இதில் சேர்க்கும் பொருட்களில் எல்லாம் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூவுக்கு மேலே இருக்கும், அந்த மகரந்தத்தையும் அடியில் இருக்கும் அந்த காம்பையும் மட்டும் நீக்கி விடுங்கள்).

எண்ணெயின் நிறம் மாறி வந்தவுடன், சிடுசிடப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைச்சிடுங்க. இந்த எண்ணெயை அப்படியே இரும்பு கலாயில் ஆறவிட வேண்டும். 24 மணி நேரம் ஆறினாலும் தவறு கிடையாது. பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த எண்ணெயை ஊற்றி வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். சூப்பரான எண்ணெய் தயாராக இருக்கும் அல்லவா.

- Advertisement -

அந்த எண்ணெயை தான் தலைக்கு தடவி வர வேண்டும். தினமும் இந்த எண்ணெயை தலைக்கு வைக்கலாம் தேங்காய் எண்ணெய் வைப்பது போல. அப்படி இல்லை என்றால் வாரத்தில் மூன்று நாள் இந்த எண்ணெயை இரவில் தலையில் தடவி மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலை தலைக்கு குளிக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: வழுக்கை தலையிலும் முடி முளைக்க செய்யுமா இந்த பூ? முடி உதிர்தல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் இந்த பூவை இப்படி செய்யுங்கள்!

தலைமுடியில் இருக்கும் அரிப்பு பொடுகு பிரச்சனையை நீக்கவும் இந்த எண்ணெய் உபயோகமாக இருக்கும். ட்ரையாக இருக்கும் உங்களுடைய முடியை சாப்டாக சில்கியாக மாற்றும். அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தியாக மாற்றும். முடி வளராத இடத்தில் முடியையும் வளர வைக்கும். இத்தனை வேலையையும் இந்த ஒரு எண்ணெய் செய்யும். உங்களுக்கு இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்