- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்புரோட்டின் சத்து மிகுந்த பச்சைப் பயிறு பூண்டு தோசை செய்முறை விளக்கம்

புரோட்டின் சத்து மிகுந்த பச்சைப் பயிறு பூண்டு தோசை செய்முறை விளக்கம்

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் சரியான முறையில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் அனைத்துமே நம் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது தான். ஆகையால் தான் உணவே மருந்து என்னும் முறையை நாம் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் காலையில் முதன் முதலில் சாப்பிடும் ஒரு உணவானது அன்றைய நாள் முழுவதும் நாம் உற்சாகமாக இருக்க உதவி செய்யும். அப்படி ஒரு உணவாக இந்த தோசையை எடுத்துக் கொண்டால் போதும். அது என்ன தோசை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த தோசை செய்ய முதலில் ஒரு கப் பச்சை பயிரை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு பயிர் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 20 பூண்டு பல் தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகுஉரித்து வைத்த பூண்டு பற்களை இதில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பூண்டின் நிறம் சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து ஐந்து காய்ந்த மிளகாய் இத்துடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் பூண்டு எல்லாம் வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ஊற வைத்த பச்சை பயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் வதக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பயிர் ஊற வைத்த தண்ணீரையே கொஞ்சமாக ஊற்றி நைசாக அரைத்து ஒரு பௌலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கைப்பிடி கொத்தமல்லியும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு மாவு கெட்டியாக இருந்தால் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள் இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்களுக்கு விருப்பமான காய்கறிகளை கூட பொடியாக அரிந்து இதில் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் மாவை எடுத்து கொஞ்சம் தடிமனான தோசையாக ஊற்றி கொஞ்சமாக நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி 3 நிமிடம் வரை இதை மூடி போட்டு வேக வைத்து சிவந்தவுடன் மறுப்புடன் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்பவர்களுக்கு கூட இப்படி ஒரு முறை பீட்ரூட்டை செஞ்சு கொடுத்தால் விரும்பி சுவைத்து மீண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

நல்ல சுவையான அதே நேரத்தில் அதிக சத்துக்கள் மிக்க ஒரு புரோட்டின் தோசை தயாராகி விட்டது. இதில் பூண்டு அதிக அளவு சேர்த்திருப்பதால் இதுவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது போன்றதொரு சத்து மிக்க உணவை செய்து கொடுக்கும் போது நாள் முழுவதுமே உற்சாகமாக இருப்பார்கள். இந்த தோசை ரெசிப்பியை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

சற்று முன்