- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை தீர எண்ணெய்

முடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை தீர எண்ணெய்

- Advertisement -

முடி என்றாலே அது கருமை நிறமாக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும். அதே போல் எலிவால் போல் இல்லாமல் அடர்த்தியாக இருந்தால் அதன் அழகே அழகுதான். அப்படி முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இன்றைய காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் இளநரை பிரச்சினை என்பது ஆரம்பித்துவிட்டது இந்த இளநரை பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முதன்மையான நோக்கமாக இருந்தாலும், நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் சில முக்கியமான பொருட்களை சேர்ப்பதன் மூலமும் இளநரை பிரச்சினையை தீர்க்க முடியும்.

- Advertisement -

இதே போல் தான் முடி உதிர்தல் என்ற பிரச்சினை நீங்குவதற்கு ஆரோக்கியமான உணவுகளையும், பழ வகைகளையும், கீரைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதோடு, தியானம், யோகா போன்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பயிற்சிகளையும் மேற்கொண்டால் முடி உதிர்வு பிரச்சினை என்பது தீரும். இருப்பினும் வெளிப்புறமாக உபயோகப்படுத்துவதற்கு சில பொருட்களையும் நாம் பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இன்றைய இந்த பதிவில் முடி உதிர்தலை தடுப்பதற்கும், முடி அடர்த்தியாக வளர்வதற்கும், இளநரை மறைந்து கருமையாக மாறுவதற்கும் செய்யக்கூடிய எளிய எண்ணெய் தயாரிக்கும் முறையை தான் பார்க்கப் போகிறோம். இதற்கு நமக்கு தேவைப்படுவது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் வேம்பாளம் பட்டை. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது.

- Advertisement -

இதில் இருக்கும் சத்துக்களால் முடியில் ஏற்படக்கூடிய இளநரைகள் மாறும். மேலும் முடி உதிர்தல் தடுக்கப்படுவதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். வேம்பாளம் பட்டை 50 கிராம் வாங்கிக் கொள்ளுங்கள். இதை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தட்டி வைத்திருக்கும் வேம்பாளம் பட்டியை போட வேண்டும்.

பிறகு அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். அடுத்ததாக கால் லிட்டர் அளவிற்கு சுத்தமான ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் வாங்க முடியாதவர்கள் விளக்கெண்ணையை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த பாத்திரத்தை நாம் சூரிய வெளிச்சம் நன்றாக படும் இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் வைத்து எடுத்தாலே போதும்.

- Advertisement -

அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெய் பாத்திரத்தை உள்ளே வைத்து 20 நிமிடம் எண்ணெயை சூடு செய்ய வேண்டும். நேரடியாக எண்ணெயை அடுப்பில் வைத்து சூடு பண்ணுவதை விட இப்படி சூடு பண்ணினால் தான் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் வெளியில் செல்லாமல் அப்படியே தங்கும்.

இதையும் படிக்கலாமே: பருக்கள் அற்ற பொலிவான முகத்தை பெற

இந்த எண்ணையை நாம் தினமும் தலைக்கு உபயோகப்படுத்தலாம். தினமும் தலையில் எண்ணெய் வைக்க விரும்பாதவர்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த எண்ணெயை நன்றாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.

சற்று முன்