- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருமையான அடர்த்தியான முடியை பெற உதவும் எண்ணெய்.

கருமையான அடர்த்தியான முடியை பெற உதவும் எண்ணெய்.

- Advertisement -

ஆண்கள், பெண்கள் என்ற இரு பாலரும் தங்கள் தலைமுடியை பாதுகாக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வயதான காலத்திலும் முடி நரைக்காமல், உதிராமல், அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த எண்ணையை உபயோகப்படுத்தினால் அவர்களின் ஆசை கண்டிப்பான முறையில் நிறைவேறும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

அந்த காலத்தில் இருந்த முன்னோர்கள் தங்களின் முடியை பாதுகாக்க விளக்கெண்ணையை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். விளக்கெண்ணெயை பயன்படுத்தியதால் விரைவிலேயே நரைமுடி ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதை அறியாமல் விளக்கெண்ணையை உபயோகப்படுத்தியதை தவிர்த்ததால் தான் இன்றைய தலைமுறையினர் விரைவிலேயே நரைமுடி பிரச்சனைக்கு ஆளாகி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த எண்ணையை தயாரிப்பதற்கு நமக்கு ஒரு கப் அளவிற்கு தேங்காய் எண்ணெயும் ஒரு கப் அளவிற்கு விளக்கெண்ணெயும் தேவைப்படும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயமும், இரண்டு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகமும், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையும் தேவைப்படும். இவை மூன்றையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு முடிந்த அளவிற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கீற்று கற்றாழையை சுத்தம் செய்து அதன் மடல்களை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் எண்ணெய்களை ஊற்ற வேண்டும். எண்ணெய் சிறிது சூடானதும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழையை அதில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கற்றாழையில் இருக்கும் ஈதப்பதம் முற்றிலும் தீரும் அளவிற்கு அடுப்பில் குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். சலசலப்பு அடங்கும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும். எண்ணெயில் இருக்கும் சலசலப்பு குறைந்த பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்க்க வேண்டும். பொடியை சேர்த்து மூன்று நிமிடம் வரை அடுப்பில் வைத்துவிட்டு பிறகு அதை அப்படியே இறக்கி விட வேண்டும்.

நான்கு மணி நேரம் இந்த எண்ணையை நன்றாக ஆற விட வேண்டும். பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணையை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் தயாராகி விட்டது. வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த எண்ணையை லேசான சுடுதண்ணீரில் வைத்து சூடு செய்து பிறகு தலைக்கு மசாஜ் செய்து தலை குளித்து வர தலை முடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: முகம் தங்கம் போல ஜொலிக்க இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

இந்த எண்ணையில் கற்றாழையை நாம் அப்படியே சேர்ப்பதால் ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தும் அளவிற்கு எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொள்வது நன்மை தரும்.

சற்று முன்