ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் விருப்பமானதாக இருக்கும். அப்படி பிடித்த நிறத்தில் கட்டாயமாக ஒரே ஒரு ஆடையாவது வாங்கி வைத்து இருப்போம். அப்படி வாங்கிய துணிகள் சில நேரங்களில் சாயம் போய்விட்டால் அதை தூக்கிப் போடவும் மனசு வராது .அதே நேரத்தில் மறுபடியும் அதை பயன்படுத்தவும் முடியாது.
இப்படி நம்முடைய விருப்பமான துணிகள் சாயம் போய் விட்டால் அதை பழையபடி புது துணி போல மாற்ற ஒரு அருமையான வழிமுறையை தான் இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும் இனி பழசு என்று எதையும் தூக்கி போடவே மாட்டீங்க.
சாயம் போன பழைய துணி புதுசு போல மாற்ற
இந்த முறைக்கு ஒரே நிறத்தில் உள்ள துணிகளை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஒரு துணியில் இரண்டு வெவ்வேறு நிறங்கள் இருந்தால் அதை இந்த முறையில் புதிதாக மாற்ற முடியாது.
இதற்கு முதலில் நீங்கள் பயன்படுத்தப் போகும் துணி மூழ்கும் அளவிற்கான ஒரு பாத்திரமும், அந்த துணியை மூழ்கும் அளவிற்கு பாத்திரத்தில் தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். தண்ணீர் ஓரளவுக்கு கொதிநிலை வரும் போது ஒரு கைப்பிடி கல் உப்பை சேர்த்து விடுங்கள்.
கல் உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்கும் போது அதில் சாய பொடி சேர்க்க வேண்டும். இந்த சாயப் பொடி கடைகளில் கிடைக்கும் அல்லது பேன்சி ஸ்டோரிலும் கிடைக்கும். அது கிடைக்காத பட்சத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். உங்களுடைய துணி எந்த நிறமோ அந்த நிறத்திற்கான சாயப் பொடியை கொதிக்கும் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள்.
இந்த சாய பொடி கலந்த உடனே அடுப்பை அணைத்து விட்டு பொடியை தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். அதற்கு ஒரு குச்சி வைத்து கலந்து விடுங்கள். இந்த சமயத்தில் தண்ணீர் சூடாக இருக்கும் கவனமாக செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் துணியை அந்த தண்ணீரில் முக்கி அதே குச்சி வைத்து துணி நன்றாக தண்ணீருக்குள் மூழ்கும்படி கலந்து அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் இருந்து துணியை எடுத்து சாதாரண தண்ணீரில் இரண்டு முறை அலசி விடுங்கள். அதன் பிறகு இந்த துணியை வீட்டின் நிழலிலே ஆற வைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சாயம் போன உங்களுடைய பழைய துணி புது துணி போல பளிச்சென்று மாறிவிடும்.
இந்த முறையை பின்பற்றும் போது நாம் கவனிக்க வேண்டியது சாயத்தண்ணீரில் முக்கிய பிறகு துணியை பிழியக் கூடாது. அது நேரத்தில் வெயிலில் காய வைக்கக் கூடாது. இந்த முறையில் சாயம் போட்ட துணி மூன்று மாதம் வரை இதே போல் பளிச்சென்று இருக்கும். மறுபடியும் சாயம் போனால் இதே போல செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பிரிட்ஜ் அதிகமா கரண்ட் எடுக்காம இருக்க சூப்பர் ஐடியா
ஒரு சில துணிகள் வாங்கி பயன்படுத்தும் போது எப்படியும் சாயம் போக ஆரம்பித்து விடும். பெரும்பாலும் சாயம் போவதற்கான காரணம் நாம் வெயிலில் அதிக நேரம் துணிகளை போட்டு விடுவது தான். அது போல இல்லாமல் துவைத்து காய வைத்து சிறிது நேரத்திலே எடுத்து விட்ட துணிகள் சாயம் போவதில் இருந்து பாதுகாக்கலாம்