- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஹெல்தியா டேஸ்ட்டான குருமா ரெசிபி இதோ உங்களுக்காக

ஹெல்தியா டேஸ்ட்டான குருமா ரெசிபி இதோ உங்களுக்காக

- Advertisement -

நம்முடைய பாரம்பரியமான சமைக்கும் உணவு வகைகளில் ஒன்று தான் இந்த வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். அது பெரும்பாலும் கூட்டு பொரியல் போன்றவையாகத் தான் இருக்கும். இன்னொரு புறம் பார்த்தால் இந்த வாழைத்தண்டை பெரும்பாலும் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

உடலுக்கு ஆரோக்கியமானது என்ற காரணத்தினால் அடிக்கடி எடுத்துக் கொள்வார்களே அன்றி, சிறியவர்களை இந்த வாழைத்தண்டை சாப்பிட வைப்பது மிகவும் கடினம். இந்த முறையில் வாழைத்தண்டை செய்து பாருங்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் திரும்பத் திரும்ப செய்ய சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 1,
வெங்காயம் -2,
தக்காளி – 2,
உருளைக்கிழங்கு – 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்,
உப்பு – 1/2 ஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்,
சோம்பு – 1 ஸ்பூன்,
முந்திரி – 10,
கசகசா – 1/4 டீஸ்பூன்,
கருவேப்பிலை – 1 கொத்து,
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி மல்லி – 1 ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொஞ்சம் மோர் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். இது சமைக்கும் வரையில் தண்டு கருத்து போகாமல் இருக்கும்.

- Advertisement -

அடுத்து உருளைக்கிழங்கு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு ஃபைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது குருமாவை தாளித்து விடுவோம்.

அதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், அனைத்தையும் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். இத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அரைத்து வைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரிந்து வைத்த உருளைக்கிழங்கு, வாழைத்தண்டு இரண்டையும் சேர்த்து ஒரு முறை வதக்கி மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக வைக விடுங்கள். அதன் பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்டைலில் சூப்பரான தேங்காய் தோசை செய்வது எப்படி?

இந்த நேரத்திற்குள்ளாக தேங்காய் சோம்பு முந்திரி, கசகசா அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். குருமா நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள் நம்ம சுவையான வாழைத்தண்டு குருமா தயார்.

சற்று முன்