- Advertisement -
Homeஜோதிடம்குரு பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரமும்

குரு பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரமும்

- Advertisement -

சுப கிரகங்களில் ஒருவராக கருதப்படுபவர் குருபகவான் என்றாலும் அவர் பாதகமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவரால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த ஜோதிடம் குறித்த பதிவில் குருபகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் பற்றியும் அதை சரி செய்வதற்குரிய பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய குரு பகவானே, மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சுப கிரகமான குரு பகவான் நீச்சமடையும் பட்சத்தில் அவரால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குரு பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டு போன்ற இடங்களில் இருக்கும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் அதே சமயம் கேது, ராகு, சனி போன்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும் பொழுதும் உடல் உபாதைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

குருபகவானுக்குரிய உறுப்புகளாக வயிறு திகழ்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குருபகவானால் ஏற்படும் குறிப்பாக அஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரு பகவானின் காரணமாக திகழ்கிறார். அது மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை வெளிப்படுத்தும் தோலும் குரு பகவானுக்குரியதாக திகழ்கிறது. தோளில் ஏற்படக்கூடிய ஒவ்வாமையும் குரு பகவானால் ஏற்படக்கூடியவை தான்.

மேலும் உடலில் ஏற்படக்கூடிய வாயு, சூடு போன்ற பிரச்சனைகளும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்று சொல்லக்கூடிய பிரச்சினையும் குரு பகவானால் ஏற்படக்கூடியது. மேலும் உடல் அதிகமாக இழைத்தல் அல்லது உடல் அதிகமாக பருமன் ஆகுதல் போன்றவையும் குரு பகவானால் ஏற்படக்கூடிய உபாதைகள் தான்.

- Advertisement -

இப்படி குருபகவானால் ஏற்படக்கூடிய உபாதைகளை சரி செய்வதற்குரிய பரிகாரமாக அவருக்கு உகந்த நிறமான மஞ்சள் நிறத்தில் ஆன உணவுப் பொருட்களை பசியுடன் இருப்பவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். மேலும் கொண்டக்கடலையை தானமாக தருவதன் மூலமாகவும் குரு பகவானின் அருளைப் பெற முடியும். அது மட்டுமல்லாமல் முடிந்த அளவிற்கு பசு மாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலம் குரு பகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும்.

குரு பகவானின் அருளை பெறுவதற்கு நாம் வழிபட வேண்டிய தெய்வம் என்று பார்க்கும் பொழுது மானசீகமாக நாம் யாராவது ஒருவரை குருவாக தேர்வு செய்து அவரை வழிப்பட வேண்டும். குறிப்பாக சித்தர்களை கூறலாம். மேலும் வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடை அணிவதன் மூலமும் குரு பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கேதுவால் ஏற்படும் உடல் உபாதைகள்.

சுப கிரகமாக இருந்தாலும் அவருடன் சேரக்கூடிய கிரகங்களாலும் அவர் இருக்கும் இடத்தாலும் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் அதற்குரிய பரிகாரத்தை செய்து உடல் உபாதையில் இருந்து வெளி வருவோம்.

சற்று முன்