வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும் எனில் முதலில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க வேண்டும் என நாம் வீட்டில் ஒரு சில விதிமுறைகளை எப்போதும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதற்கு நம் முன்னோர்களும் சாஸ்திரங்களும் வழியாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக வீடு எப்பொழுதும் செல்வ வளத்துடன் இருக்க வீட்டில் எப்பொழுதும் நுழையும் போதே சில பொருட்களை பார்க்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பொருள் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
செல்வ வளம் பெருக
செல்வ வளம் பெருகவும் தாயாரின் அனுகிரகமும் பரிபூரணமாக கிடைக்கவும் வீட்டில் எப்பொழுதும் மங்களப் பொருட்கள் நிறைந்து இருக்க வேண்டும். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதில் பலருக்கும் மங்களப் பொருட்கள் என்றால் எவையெல்லாம் மங்களப் பொருட்கள் என்றும் அதில் குறிப்பாக எது இருக்க வேண்டும் என்று சந்தேகம் இருக்கும் அதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் நுழையும் பொழுது முதலாவதாக நம் தெய்வப் படங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் வாசலில் கஜலட்சுமி தாயார் படம் விநாயகர் படம் என ஏதேனும் ஒன்றை நிலைவாசலில் செதுக்கி வைத்திருப்பார்கள். இப்பொழுது பெரும்பாலும் அப்படி வைப்பது இல்லை. ஆனால் வீட்டில் நுழையும் போதே இந்த படங்களை பார்க்கும் பொழுது செல்வ வளம் நம்மை தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வீட்டிற்குள் நுழைந்த பிறகு கோவில் கோபுரம், மயில், யானை நீரூற்று, சூரிய உதயம் போன்ற படங்கள் எல்லாம் மாட்டி இருப்பது நல்ல பலனை தரும். அதுமட்டுமின்றி வீட்டிற்குள் நுழையும் பொழுதே நல்ல நறுமணம் மிக்க பொருட்கள் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் நுழையும் போதே முகம் சுளிப்பது போல இருந்தால் நிச்சயம் அந்த வீட்டிற்குள் தாயார் வாசம் இருக்காது.
அதே போல் வாய்ப்புள்ளவர்கள் இசைவாத்தியங்களை வரவேற்பு அறையில் வைக்கலாம். இது மிக மிக சிறப்பான பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்த மாதிரியான இசைக்கருவிகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதே போல் வரவேற்பரையில் மெலிதாக ஏதேனும் ஒரு இசை எப்பொழுதும் ஒலிப்பது போல் இருக்கலாம் அல்லது மந்திரங்களை ஒலிக்க விடலாம். இது வீட்டுக்கு வற்றாத செல்வ வளத்தை கொடுக்கும்.
அதே போல் வரவேற்பு அறையில் எப்பொழுது ஒரு தேங்காயை வைத்திருப்பது வீட்டிற்கு அவ்வளவு பணவரவை தேடித் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து சுப காரியங்களும் முதன்மையாக இருக்கக் கூடிய இந்த தேங்காய் நம் வரவேற்பறையில் எப்போதும் இருக்க வேண்டும். அந்த தேங்காயை நாம் பிறகு சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எதையும் செய்ய முடியாதவர்கள் இதை மட்டுமாவது தவறாமல் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
இது மட்டும் உருளியில் மலர்களை போட்டு வைப்பது மிகவும் விசேஷமானது. இதுமட்டுமின்றி வாசப்படியில் போடும் கால் மிதியடிகளை எப்போதும் சுத்தமாகவும் வாடை இல்லாமல் இருக்க வேண்டும். சில வீடுகளில் கிழிந்து போன பார்க்கவே சகிக்காத நிலையில் வைத்திருப்பார்கள். இதை ஒரு காலமும் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்கலாமே:சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி முடிச்சு
நல்ல முறையில் உழைப்பதுடன் நல்ல எண்ணங்களுடன் வீட்டையும் நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்து இருக்கும். இத்துடன் பண வரவானது உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகளை இவைகளை உருவாக்கித் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் பயன்படுத்தி பலன் அடையலாம்.