- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் சேர்ந்து இருக்க வேண்டிய பொருள்கள்

வீட்டில் சேர்ந்து இருக்க வேண்டிய பொருள்கள்

- Advertisement -

நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் சாஸ்திரங்கள் நிறைந்துள்ளது. சமையலறையில் தொடங்கி வீட்டின் முற்றத்தில் பயன்படுத்தும் பொருட்கள் வரை ஒவ்வொன்றை பயன்படுத்தக் கூடிய விதங்களுக்கென தனி வரையறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். இதற்குப் பலவிதமான காரணங்களும் உண்டு.

அப்படியான சில பொருட்களை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்தப் பொருள்களை நம் வீட்டில் ஒன்றாக சேர்த்து வைக்கும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றைக்கும் நிறைந்து பொன்னும் பொருளும் பெருகும் என்பது ஐதீகம். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக சேர்த்து வைக்க வேண்டிய பொருள்கள்

முதலாவதாக நம் வீட்டை பெருக்கக் கூடிய துடைப்பத்தையும் குப்பைகளை அல்ல கூடிய முறத்தையும் சேர்த்து வைக்க வேண்டிய பொருள்களில் முதன்மையானது. இவற்றை எப்போதும் தனித்தனியாக வைக்க கூடாது. பெருக்கி வாரி முடித்தவுடன் இரண்டையும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைத்து வைக்க வேண்டும்.

துடைப்பம் முறம் தானே என்று அலட்சியமாக பயன்படுத்தக் கூடாது. இந்த துடைப்பத்தை வாங்குவது முதல் பயன்படுத்துவது வரை பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளது. குறிப்பாக இதை பயன்படுத்தும் விதத்திலேயே நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அடுத்ததாக அம்மிக்கல் அதனுடைய குழவி முன்பெல்லாம் இதை பெரிய அளவில் வைத்து பயன்படுத்தினார்கள். இப்போது அவரவர் சமையல் அறையில் சின்னதாக வைத்து பயன்படுத்துகிறார்கள். எப்படி இருப்பினும் இவை இரண்டையும் ஒன்றாக வைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இதை பிரித்து வைக்க கூடாது.

அதே போல் ஆட்டுக்கல், உரல் இன்று பெரும்பாலான வீடுகளில் இது கிடையாது .ஆனால் முன்பு சொன்னது போலவே இதை இஞ்சி பூண்டு நசுக்குவதற்கான சிறிய அளவில் இப்போது அனைவர் வீட்டிலும் வைத்திருக்கிறார்கள். அதை எப்போதும் சேர்த்து வைக்க வேண்டும். கழுவி சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில் தனித்தனியாக வைக்க கூடாது.

- Advertisement -

முன்பெல்லாம் தலையணை பாய் இரண்டையும் ஒன்றாகத் தான் சுருட்டி வைப்பார்கள். இப்போது அதுவும் கிடையாது. ஆனால் அனைவர் வீட்டிலும் மெத்தை தலையணை உண்டு. இதையும் எப்போதும் இணைத்தே வைக்க வேண்டும். தலையணை ஒருபுறம் மெத்தை ஒரு புறம் என தனித்தனியாக வைக்க கூடாது.

அடுத்து வீட்டில் இருக்கும் உறவுகள் அதிலும் குறிப்பாக கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்களை பிரித்து வைக்காமல் இருந்தாலே குடும்பத்திற்குள் பிரிவினை இல்லாமல் இருக்கும் என்பதும் நம் முன்னோர் உடைய நம்பிக்கை. அதுமட்டுமின்றி மேற் சொன்ன பொருள்கள் அனைத்திலும் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்கள் தான்.

இதையும் படிக்கலாமே:வேண்டுதல் நிறைவேற ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

அவைகளை அப்படி வைப்பதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து பொன்னும் பொருளும் சேர்ந்தே பெருகும் என்பது ஐதீகம். வீட்டில் தரித்திரம் ஏறாமல் வறுமை தாக்காமல் செல்வம் பெருக்கி தரக்கூடிய இந்த ஆன்மீக குறிப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

சற்று முன்