- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆரோக்கியமான கேரட் புட்டிங் செய்முறை

ஆரோக்கியமான கேரட் புட்டிங் செய்முறை

- Advertisement -

இன்றைய காலத்தில் குழந்தைகள் வீட்டில் செய்யும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதைவிட கடைகளில் இருந்து வாங்கி சாப்பிடும் உணவுகள் தான் அதிகமான அளவில் இருக்கிறது. அந்த உணவுகளை நம்மால் வீட்டில் செய்து தர முடியவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை நாம் கடையில் சாப்பிட அனுமதித்து விடுகிறோம்.

அப்படி செய்யாமல் அவர்கள் விரும்பி சாப்பிடும் பொருட்களை ஆரோக்கியமான முறையில் நாமே வீட்டில் எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொண்டு செய்து தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் கடைகளில் வாங்கி சாப்பிடக்கூடிய புட்டிங் வகைகளை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்யலாம் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான அளவு

  • கேரட் – 1/2 கிலோ
  • பால் – 2 கப்
  • சர்க்கரை – 1 1/4 கப்
  • அரிசி மாவு – 1 1/4 கப்
  • ஏலக்காய் தூள் – 3/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் கேரட்டை நன்றாக தோலை நீக்கிவிட்டு சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சி ஆற வைத்த பால் ஒரு கப் அளவு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை விட்டுவிட வேண்டும். விசில் முழுவதும் போன பிறகு அதை எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆரிய இந்த கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் பால் இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரை ஒரு கப் அரிசி மாவு முக்கால் கப் ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து கேரட் வேக வைத்திருந்த பால் இருக்கும் அல்லவா அதையும் ஊற்றி நன்றாக கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டை வைத்து ஒரு டிபன் பாக்ஸ் அல்லது கேக் செய்யும் பாக்ஸ் இருந்தால் அதில் நெய்யை நன்றாக தடவி நாம் அரைத்து வைத்திருக்கும் கேரட் விழுதை அதில் ஊற்றி சரிசமமாக மாற்றி விட வேண்டும். இப்பொழுது இந்த பாத்திரத்தை எடுத்து தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து விட வேண்டும்.

10 நிமிடம் அது வேகட்டும். மறுபடியும் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் அரைக்கப் அளவிற்கு பச்சரிசி மாவு ஒரு கப் அளவிற்கு பால் மூன்று டேபிள் ஸ்பூன் சர்க்கரை கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து நாம் அரைத்து வைத்திருக்கும் அரிசி விழுதை அந்த கேரட்டிற்கு மேல் ஊற்றி மறுபடியும் மூடி வைத்து பத்து நிமிடம் வேக விட வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற வைக்க வேண்டும். அது நன்றாக ஆரிய பிறகு அந்த ஓரங்களை கத்தியால் ஒரு முறை கீறிவிட்டு தட்டில் தலைகீழாக கவுத்தினால் புட்டிங் வந்துவிடும். இதை கேட்கை கட் செய்வது போல செய்து குழந்தைகளுக்கு தருவதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான கோதுமை மாவு நூடுல்ஸ் செய்முறை

முடிந்த அளவிற்கு வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களை வைத்து நாம் செய்து தரும் ஸ்நாக்ஸை குழந்தைகள் சாப்பிடும் வகையில் பார்த்துக் கொள்வதே நல்லது. இதில் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்வது மேலும் ஆரோக்கியத்தை தரும்.

சற்று முன்