இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பணம் சம்பாதிக்க எப்படி பெரும்பாடு படுகிறானோ, அதே போல வாங்கிய கடனை அடைக்கவும் பாடுபடுகிறான். எத்தனை உழைத்து சம்பாதித்தாலும் பண பற்றாக் குறையான ஒரு வாழ்க்கையை தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது பெரும் சிரமம் தான்.
இதனாலேயே பலரும் கடன் அதைவாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் நொந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளமானோர். கடன் இருக்கும் வீட்டில் நிம்மதி சந்தோஷம் அனைத்துமே வெளியேறி விடும். இத்தகைய பெரிய கடன் பிரச்சனையிலிருந்து வெளி வரக் கூடிய எளிய ஒரு பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
கடன் தீர உணவு தான பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் முழு கோதுமை தானியத்தை வாங்கி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். ஆகையால் திங்கட்கிழமையை இந்த கோதுமையை தயார் செய்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு சிறிய பௌலில் கொஞ்சம் கோதுமையை சேர்த்து விடுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக வெள்ளை சர்க்கரையை சேர்த்து பவுடர் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து இந்த தண்ணீரைக் கொண்டு கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
அதன் பிறகு இந்த மாவை சிறுசிறு கோலி உருண்டைகள் போல உருட்டி நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். இதை காய வைக்கும் போது எறும்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த கோதுமை உருண்டை ஒரு நாள் மட்டும் காய்ந்தாலே போதும். அதன் பிறகு ஒரு டப்பாவில் எடுத்து போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நீங்கள் திங்கட்கிழமை செய்து கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று காலையில் வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு ஒரு தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்த கோதுமை உருண்டையிலிருந்து 11 கோதுமை உருண்டை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் வரவேற்பு அறையில் கிழக்கு பார்த்து நின்று கொண்டு இந்த கோதுமை உருண்டைகளை உங்களுக்கு நீங்களே சுற்றி கொள்ளுங்கள்.
இதை சுற்றும் போது வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றுங்கள். இப்படி சுற்றிய பிறகு இந்த உருண்டைகளை ஒரு பேப்பரில் போட்டு மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் செல்லும்போது இந்த உருண்டைகளை மீன்களுக்கு உணவாக போட வேண்டும்.
உங்கள் வீட்டில் அருகில் இது போல மீன்கள் இருக்கக் கூடிய இடம் இல்லை என்றால் ஏதேனும் ஒரு எறும்பு இருக்கும் இடத்தில் இதை போட வேண்டும். அப்படி போடும் போது தூள் செய்து போடுங்கள். இந்த இரண்டில் ஏதாவது ஒரு முறையை செவ்வாய்க்கிழமை தோறும் பின்பற்றுபவர்களுக்கு கடன் என்னும் கர்மா நிச்சயம் கழிந்து விடும்.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக படிகாரம்
ஒவ்வொருவரும் கடனால் அவதிப்படுவது அவர் அவருடைய கர்மவினை என்று சொல்லப்படுகிறது. அந்த வினை தீர்ப்பதற்கான எளிய ஒரு பரிகார முறையாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.