- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழில் சிறக்க லட்சுமி பூஜை

தொழில் சிறக்க லட்சுமி பூஜை

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி அவருடைய வேலையோ தொழிலோ சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்குரிய உழைப்பையும் முயற்சியையும் அவர் மேற்கொள்ள வேண்டும். உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்ட பிறகும் அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் அவருடைய தொழிலிலோ அல்லது வேலையிலோ பெற முடியவில்லை என்னும் பட்சத்தில் தெய்வத்தின் உதவியை நாட வேண்டும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு மகாலட்சுமி தாயாரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து இறப்பது வரை அன்றாடம் அவருடைய வாழ்க்கையில் தேவைப்படக்கூடிய மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பணம். பணம் இல்லாத வாழ்க்கை எப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கையாக இருக்கும் என்று பலரும் அவர்களின் அனுபவ பூர்வமாகவே உணர்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்காக சொந்தமாக தொழில் செய்வது அல்லது வேலைக்கு செல்வது என்று பல முயற்சிகளை மேற்கொள்வோம்.

- Advertisement -

அவர் அந்த முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் அந்த முன்னேற்றத்தை பெறுவதற்குரிய பணவரவை ஏற்படுத்தவும் நமக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை மிகவும் எளிமையான முறையில் தினமும் எப்படி வழிபாடு செய்து நம்முடைய தொழிலை தொடங்கினால் அன்றைய தினம் வெற்றிகரமாக நடக்கும் என்று பார்ப்போம்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு ரூபாய் இருந்தால் போதும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நம்முடைய பாக்கெட் அல்லது பர்ஸில் இருக்கும் ஒரு ரூபாயை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த ஒரு ரூபாயை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு சொட்டு நெய்யை விட வேண்டும். அடுத்ததாக அந்த நெய்க்கு மேல் குங்குமத்தை வைத்து துளசி இலையையும் அதற்கு மேல் வைத்து “ஓம் வரலட்சுமி போற்றி” என்னும் மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு “இன்றைய பொழுது என்னுடைய தொழிலில் பணவரவு ஏற்பட வேண்டும். இந்த பணவரவு ஏற்பட்டால் என்னுடைய குடும்பம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு வரும் பட்சத்தில் என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வேன்” என்றும் மனதார மகாலட்சுமி தாயாரிடம் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு நாணயத்தின் மேலிருக்கும் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு இந்த நாணயத்தை ஒரு துணியில் சுற்றி நம்முடைய பாக்கெட்டிலோ அல்லது பர்ஸிலோ வைத்துக்கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் இதே போல் பூஜை செய்வதற்கு முன்பாக முந்தைய நாள் பூஜை செய்த அந்த நாணயத்தை எடுத்து உண்டியலில் அல்லது தனியாக ஒரு சொம்பிலோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த சொம்பு நிறையும் வரை இப்படியே சேர்த்துக் கொண்டே வாருங்கள். சொம்பு நிறைந்ததும் அதில் இருக்கும் நாணயங்களை எடுத்து மகாலட்சுமி தாயாருக்கு மாலையாகவோ அல்லது வேறு ஏதாவது கோவில் காரியத்திற்காகவோ உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படி தினமும் எளிமையான இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நம்முடைய தொழில் சிறப்பாக நடைபெறும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதனால் பணவரவு அதிகரிக்கும். முடிந்த அளவிற்கு பிறருக்கு தான தர்மம் செய்து அதன் மூலம் தங்களின் கர்ம வினைகளை குறித்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு கர்ம வினைகள் குறைகிறதோ அந்த அளவிற்கு தெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: திருப்பதிக்கு செல்லும் போது மறக்காமல் செய்ய வேண்டியது
மிகவும் எளிமையான இந்த லக்ஷ்மி பூஜையை நம்பிக்கையுடன் தினமும் செய்பவர்களுக்கு பணவரவு ஏற்படுவதோடு தொழிலும் சிறப்பாக நடைபெறும்.

சற்று முன்