- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமி அம்சத்தோடு வளம் வரக்கூடியவர்கள் பெண்கள். அவர்கள் கையாலேயே செய்ய வேண்டிய பரிகாரம் இது. உங்க வீட்டு மகாலட்சுமியான உங்கள் மனைவி, உங்கள் பெண் பிள்ளைகளின் கையால், இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் மகாலட்சுமி அம்சம் நிறைவாக இருக்கும். அந்த குபேரரின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும்.

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு வீட்டில் செல்வ செழிப்பு உயரும். பெண்களின் கையால் பூஜை அறையில் வைக்க வேண்டிய அந்த வேர் எந்த வேர் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குபேரரின் அருளை பெற பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

வெள்ளருக்கு வேர். வடக்கு திசை நோக்கி வளர்ந்து இருக்கக்கூடிய வெள்ளெருக்க வேரை பிடுங்கி, மஞ்சள் தண்ணீரில் கழுவி ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பூஜையறையில் வைத்து, தினமும் விளக்கு ஏற்றும் போது, இந்த வேருக்கு ஊதுவத்தி காண்பித்து, வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும், செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று பெண்கள் பிரார்த்தனை வைத்தால், உங்கள் குடும்பம் சுபிட்சத்தோடு சீரும் சிறப்புமாக இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

ஆண்கள் அந்த வேரை பிடுங்கிக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் கொடுத்து விட வேண்டும். அடுத்தடுத்த வேலைகளை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் செய்ய வேண்டும். இந்த வேர் ஒருமுறை உங்களுக்கு கிடைத்தால் போதும். அடுத்த ஒரு வருடத்திற்கு மாற்ற தேவை இல்லை. புது வேர் மீண்டும் கிடைக்கும் வரை இதே வேரை வைத்து பூஜை அறையில் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

புதுசாக வேர் கிடைத்தவுடன் பழைய வேரை நீர் நிலைகளில் கொண்டு சென்று போட்டு விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம். இதை செய்து பாருங்கள். குபேரரின் அனுகிரகம் உங்கள் குடும்பத்திற்கு நிறைவாக கிடைக்கும்.

அதேபோல எந்த ஒரு வீட்டில், பெண்கள் அவர்களுடைய வீட்டு வேலைகளை முகம் சுழிக்காமல் செய்கின்றார்களோ, சந்தோஷமாக வீட்டு வேலைகளை ஏற்றுக்கொண்டு செய்கிறார்களோ அந்த வீட்டில் செல்வ கடாட்சம் நிறைந்திருக்கும். வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை எப்போதும் சுத்தமாக துடைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பொருட்களும் சரி, சமையலறையும் சரி, சுத்தமாக இருக்கும் போது பெண்களுடைய மனது தெளிவுபடும். குழப்ப நிலையில் இருக்காது. இதனால் குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்காக பெருகும். வீட்டில் இருக்கும் பெண்கள் பல மடங்கு சந்தோஷமாக இருந்தால் பல மடங்கு செல்வ செழிப்பு அதிகரிக்க தான் செய்யும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட முருகன் வழிபாடு

அடுத்தபடியாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் கல் உப்பு வாங்கி வரவேண்டும். ஆண்கள் சென்று இந்த கல்லுப்பை வாங்கி வருவதை விட, பெண்கள் கடைக்கு சென்று அவர்களது கையால் பணம் கொடுத்து கல் உப்பு வாங்கி வந்து அதை உப்பு ஜாடியில் கொட்டி, அந்த கல்லுப்பை அவர்கள் கையால் எடுத்து சமையலில் சேர்த்து சமைப்பது என்பது குடும்பத்திற்கு அத்தனை செல்வ செழிப்பை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்