- Advertisement -

வைகாசி விசாக வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக திகழக்கூடியது விசாக நட்சத்திரம். அதுவும் வைகாசி மாசத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று தான் முருகப்பெருமான் அவதரித்தார் இன்று புராணங்கள் கூறுகிறது. அதனால் அன்றைய தினம் நம் முருகப்பெருமானை வழிபட்டோம் என்றால் முருகப்பெருமானின் அருள் ஆனது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படிப்பட்ட வைகாசி விசாகமானது இந்த மாதம் 22ஆம் தேதி வருகிறது. இந்த வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை ஆலயத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வைகாசி விசாக சங்கல்ப விரதம்

சூரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான் என்றும் அப்படி அவர் தோன்றிய அந்த தினம் தான் வைகாசி விசாகம் என்றும் புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட வைகாசி விசாக நட்சத்திர நாளன்று இந்த உலகத்தில் எந்த முறையில் முருகனின் ஆலயம் இருந்தாலும் அந்த ஆலயத்தில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

- Advertisement -

இந்த வழிபாட்டில் பலரும் தங்களுடைய வேண்டுதல்களை கூறி முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள். விரதம் இருப்பது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்று பல நேர்த்திக்கடன்களை செய்து முருகப்பெருமானின் அருளைப் பெரும் அற்புத தினமாக தான் வைகாசி விசாகம் திகழ்கிறது. அப்படிப்பட்ட அந்த நாளில் முருகப்பெருமானை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

இந்த வைகாசி விசாகமானது மே மாதம் 22ஆம் தேதி காலை 8:18 க்கு ஆரம்பித்து 23ஆம் தேதி காலை 9:43 வரை இருக்கிறது. அதனால் வைகாசி விசாகம் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 22 ஆம் தேதி அன்று மேற்கொள்வது சிறப்பு. தங்களுடைய உடல் நலத்தை பொறுத்து முழு நேரமும் உபவாசம் இருந்து விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விட்டு இருப்பார்கள். இன்னும் சிலருக்கோ மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் எளிமையான ஆகாரங்களை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள்.

- Advertisement -

எப்பொழுதும் சஷ்டி, கிருத்திகை விரதம் இருப்பவர்கள் எந்த முறையில் முருகப் பெருமானை வீட்டில் வழிபாடு செய்வார்களோ அதே முறையில் இந்த வைகாசி விசாக நட்சத்திர நாள் அன்றும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்த அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு வாசனை மிகுந்த மலர்களை சூட்டி மகிழுங்கள்.

பிறகு முருகப் பெருமானுக்குரிய பாடல்களான கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் போன்றவற்றை படித்து பாராயணம் செய்யலாம். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் முருகப்பெருமானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவருக்கு மிகவும் பிடித்தமான கந்தர்ப்பத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானின் அபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக அபிஷேகத்திற்காக தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். கோவிலிலும் ஆறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யலாம். இந்த முறையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை நாம் மனதார வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அருள்வார்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் தரும் கால பைரவர் வழிபாடு

எளிமையான இந்த முருக வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

சற்று முன்