நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய ஒன்றாக திகழ்வதுதான் பணம். ஒருவரிடம் பணம் இருந்தால் அவருக்கு அனைத்துமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதே பணம் இல்லாத நபரை மற்றவர்கள் திரும்பி கூட பார்க்காமல் சென்று விடுவார்கள். பணத்தால் பல நன்மைகளும் அதேசமயம் தீமைகளும் ஏற்படுவது உண்டு அதிக அளவில் பணம் இருப்பவர்களுக்கு அதிக அளவில் நன்மைகளும் தேவையான அளவு பணம் இல்லாதவர்களுக்கு அதனால் சிரமங்களும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இப்படி சிரமப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பண தேவையை பூர்த்தி செய்வதற்காக பண பிரச்சனையிலிருந்து வெளியில் வருவதற்காக பைரவரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண பிரச்னை தீர
உக்ர தெய்வங்கள் வரிசையில் பைரவருக்கு முதலிடம் தரப்படுகிறது. மேலும் அவர் காவல் தெய்வமாக திகழ்கிறார். அவரிடம் நம்முடைய பிரச்சனை என்னவோ அதை கூறினால் அதற்குரிய வழிகளை நமக்கு காட்டுவார் என்று கூறப்படுகிறது. மேலும் நமக்கு பாதுகாப்பாக இருந்து நம்முடைய பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பாதுகாக்கும் தெய்வமான கால பைரவர் இடம் நம்முடைய பணரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை சிவன் கோவிலில் இருக்கும் கால பைரவருக்கு தான் செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு பழங்கால சிவன் கோவிலாக பார்த்து செல்லுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நீங்கள் செய்யலாம். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கால பைரவருக்கு எட்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு பைரவருக்கு சிவப்பு மலர்களை தந்து உங்களுடைய பண பிரச்சினை முழுமையாக நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எட்டு முறை அவரை வலம் வர வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு வாரங்கள் கால பைரவரை தீபமேற்றி வழிபடுவதன் மூலம் நம்முடைய வேண்டுதலான பண பிரச்சினை அனைத்தும் நீங்கும். பண பிரச்சினை நீங்குவதால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கடன் பிரச்சனையும் தீரும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
எட்டு வாரங்கள் நிறைவடையும் பொழுது கால பைரவருக்கு தங்களால் இயன்ற எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதத்தை செய்து எடுத்துக்கொண்டு போய் நெய்வேத்தியமாக வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வெற்றியை தரும் முருகன் தரிசனம்
சக்தி வாய்ந்த கால பைரவரை முழு மனதுடன் நம்பி இப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவார்கள்.