நாளுக்கு நாள் எல்லோருக்குமே பண தேவையானது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய வருமானம் எவ்வளவு தான் அதிகமானாலும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. தேவைக்கு கொஞ்சம் அதிகமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதை சேமிப்பில் வைக்க வேண்டும்.
சொத்து சுகம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம் உங்களுக்காக. பெருமாளை நினைத்து செய்ய போகும் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்து பலன் பெறலாம்.
பணம் தரும் 5 ரூபாய் பரிகாரம்
இந்த பரிகாரம் செய்ய உங்களுக்கு தேவையான பொருள் 5 துளசி இலை, 5 ரூபாய் நாணயம், பச்சை நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் டப்பா. இவ்வளவு தான். டப்பா கொஞ்சம் பெரிய அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்கைகளில் ஐந்து ரூபாயையும், ஐந்து துளசி இலைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு, பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் திரு உருவத்தை பார்த்தவாறு, பெருமாளுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த வேண்டுதலை வைக்கவும். ‘எங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும், எங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும்’ என்ற வேண்டுதலை மட்டும் வையுங்கள் போதும். இதே போல எத்தனை முறை வேண்டுமென்றாலும் சொல்லலாம்.
வேறு எந்த பிரார்த்தனையையும் சொல்லிக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பிரார்த்தனையை முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் பொருளை அந்த பச்சை டப்பாவிற்குள் போடவும். அந்த டப்பாவை மூடி உங்களுடைய வீட்டின் சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பா அடுத்தவர்கள் கண்ணுக்கு தெரியக்கூடாது. எதற்காக இதில் துளசி இலை இருக்கிறது. எதற்காக இதில் ஐந்து ரூபாய் நாணயம் இருக்கிறது.
என்று அடுத்தவர்கள் பார்க்கும்படி, கேள்வி கேட்கும் படி இந்த டப்பாவை வைக்காதீங்க. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர அடுத்தவர்களுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது. வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் இதே போல ஐந்து ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் துளசி இலைகளை கையில் வைத்துக்கொண்டு செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அந்த பச்சை நிற டப்பாவில் போட்டு சேகரித்து வர வேண்டும். வாரவாரம் பழைய துளசி இலைகளை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
ஒரு கட்டத்தில் அந்த டப்பா 5 ரூபாயால் நிரம்பி வழிய தொடங்கும் போது, உங்களுடைய வீட்டில் செல்வ வளமும் படிப்படியாக உயர்ந்து, இருப்பதை உணர்வீர்கள். 50, 5 ரூபாய் நாணயங்கள் சேர்ந்து விட்டது, 100 5 ரூபாய் நாணயங்கள் சேர்ந்து விட்டது என்றால், அந்த பணத்தை எல்லாம் எடுத்து அப்படியே அந்த காசுக்கு சாப்பாடு வாங்கியோ அல்லது உங்கள் கையாலேயே சமைத்தோ, இல்லாத இரண்டு பேருக்கு அன்னதானம் செய்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவுதான்.
அந்த டப்பா நிரம்பும் வரை ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்துக் கொண்டே வாருங்கள். அதற்காகத்தான் பெரிய பிளாஸ்டிக் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது. இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே உங்கள் பணப்பிரச்சனை எல்லாம் குறைந்து சேமிப்பு உயர்வதை நிச்சயம் உங்களால் உணர முடியும்.
இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனை தீர ஆஞ்சநேயர் வழிபாடு
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. பெருமாள் உங்களுக்கு நல்ல வழியை காண்பித்து கொடுப்பார். நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். இன்று சனிக்கிழமை மதியம் 1:00 – 2:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லை என்றால் இரவு 8:00 – 9:00 மணிக்குள் இந்த டப்பாவை தயார் செய்து சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள்.