- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு

செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு

- Advertisement -

எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, வாராகியை மனதார நினைத்து அந்த கஷ்டம் என்னை விட்டு விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலே போதும். வாராகித்தாய் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாள். கஷ்டத்தை உடனடியாக உங்கள் பக்கம் நெருங்க விடாமல் தடுப்பாள்.

நீங்கள் நின்ற இடத்தில் இருந்து கண்களை மூடி, மூச்சை நன்றாக உள்வாங்கி வாராகி அம்மா என்று கூப்பிட்டாலே போதும், உங்களுக்கு உண்டான நல்லது அந்த நிமிடமே நடக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. வாரஹியை வழிபாடு செய்பவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் உண்மையான பக்தி இல்லாமல் அடுத்தவர்களை கெடுக்கும் குணத்தோடு வாராகித் தாயிடம் யாரும் நெருங்க கூட முடியாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு தீர்க்க முடியாத உடல் உபாதைகள் இருக்கிறதா, நோய்நொடி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா, தீர்க்க முடியாத மன கஷ்டத்தால் தவித்து வருகிறீர்களா. உங்களுக்கான வாராகி வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரும்பாலும் எதிரி தொல்லை நீங்கவும் கண்திருஷ்டி விலகவும் ஏவல் பில்லி சூனியத்திலிருந்து தப்பிக்கவும் தான் வாராகி வழிபாடு செய்வார்கள்.

ஆரோக்கிய பிரச்சனைக்கும் வாராகி வழிபாடு செய்யலாமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். நிச்சயமாக செய்யலாம். செவ்வாய்க்கிழமை வாராகியை இப்படி கும்பிட்டால் உங்களுக்கு நோய்நொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு

செவ்வாய்க்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த மந்திரத்தை சொல்ல பூஜை அறையில் வாராகியின் திரு உருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உங்கள் வீட்டில் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு பூக்களை சாத்தி அலங்காரம் செய்து, இந்த மந்திரத்தை சொல்லலாம்.

வாராஹிதாய் உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை அந்த தீபச்சுடரின் மூலம் வாராஹித்தாய் நிச்சயம் உங்களுக்கு அருள் பாவிப்பாள். பூஜை அறை முன்பாக ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து ‘ஓம் அஷ்டபுஜ வாராகி தாயே போற்றி போற்றி!’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். நேரம் இல்லை இத்தனை முறை எல்லாம் உச்சரிக்க முடியாது என்பவர்கள் 27 முறை பொறுமையாக வாராகித் தாயின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுடைய வலது கையை உங்கள் வயிற்று பகுதியில் வைத்துக் கொண்டு சொல்ல வேண்டும். பிறகு வாராஹித்தாயை நமஸ்காரம் செய்து கொண்டு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம். செவ்வாய்க்கிழமை தோறும் காலை இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் வளர்பிறை பஞ்சமி திதி தேய்பிறை பஞ்சமி திதியில் உங்கள் வாயால் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது எட்டு கரங்களைக் கொண்டிருக்கும் வாராஹித்தாய் எட்டுத்திக்கிலிருந்து வரக்கூடிய கஷ்டங்களை தடுத்து நிறுத்துவாள். முழுமையான ஆரோக்கியத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பாள்.

நிறைய பேருக்கு வயிறு வலி, முதுகு வலி, கை கால் மூட்டு வலி, என்ற பிரச்சனைகள் இருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் மருந்து மாத்திரை சாப்பிட்ட அவதிப்படுகிறார்கள். இனம் புரியாத இந்த நோய் நொடியில் இருந்து எப்படித்தான் விடுபடுவது என்றே தெரியாது. மருந்து மாத்திரை சாப்பிட்டும் வலிக்கு விமோசனம் கிடைக்காது.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல் நீங்கி பண வரவு அதிகரிக்க

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் மருந்து மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டே இந்த ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டையும் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்