- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகள் தீர கல் உப்பு பரிகாரம்

பிரச்சினைகள் தீர கல் உப்பு பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால் கடன் பிரச்சினை இருக்கக் கூடாது. கடன் பிரச்சினை இருக்கக் கூடாது என்றால் நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருக்கக்கூடாது. எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் கடன் பிரச்சினை ஏற்படும். மன நிம்மதி குலையும். வீட்டில் சந்தோஷம் இருக்காது.இந்த எதிர்மறை ஆற்றல்களும் கண்திருஷ்டியும் விலக வேண்டும் என்றால் அதற்காக நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான கல்லுப்பு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் மற்றும் கண் திருஷ்டி தீர கல் உப்பு பரிகாரம்

பொதுவாக கல் உப்பு என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி திருப்பாற்கடலை கடையும் பொழுது தான் தோன்றினால் என்றும் அதே போல் தான் கல் உப்பு கடலில் இருந்து தோன்றுகிறது என்றும் கூறுவார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் கல் உப்பை வாங்கி வருவதன் மூலம் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கிறோம் என்றும் கூறப்படுகிறது. இதே போல் புதுமனை புகுவிழாவில் முதலில் கல் உப்பை தான் எடுத்துக் கொண்டு செல்வார்கள். இப்படி கல் உப்பிற்கும் மகாலட்சுமிக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று கலங்குபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை இரவு நேரத்தில் படுக்கச் செல்வதற்கு முன்பாக தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நான்கு வெற்றிலைகள் இருந்தால் போதும். படுக்க செல்வதற்கு முன் கதவு, ஜன்னல்களை மூடி கொள்ளுங்கள். கதவு ஜன்னல் எதுவும் திறந்திருக்கக் கூடாது.

வீட்டின் நான்கு மூலைகளிலும் வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து படுத்து விட வேண்டும். மறுநாள் காலையில் இந்த கல்லுப்பையும் வெற்றிலையும் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் போட்டுவிட வேண்டும். கல்லுப்பு நன்றாக கரைந்த பிறகு அதை கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.

- Advertisement -

புதிதாக வீட்டிற்குள் வரும் நபர்களால் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நம்முடைய வீட்டு நிலை வாசலின் வெளிப்புறத்தில் கட்டிவிட வேண்டும். இப்படி கட்டுவதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றலும் வராது. அடுத்ததாக பணத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்பது நம்முடைய கைப்பட இருப்பது கிடையாது. பல பேரின் கைகளில் இருந்து மாறி தான் நம்மிடம் வரும் அப்படி மாறும் பட்சத்தில் அவர்கள் எப்படிப்பட்ட நபர்களாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனால் பணத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் பணத்தை நம்முடைய பூஜை அறையிலோ அல்லது பணம் சேர்த்து வைக்கும் பீரோவிலோ வைப்பதன் மூலம் அங்கேயும் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

அதனால் நாம் வெளியில் இருந்து பணத்தை வாங்கி வருகிறோம் என்றால் அதை ஒருநாள் முழுவதும் கல் உப்பில் வைத்து விட்டு பிறகு அதை எடுத்து பூஜையறையிலோ அல்லது பீரோவிலோ வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் பணத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மஹாலக்ஷ்மி தாயாரின் அனுக்கிரகமும் பரிபூரணமாக கிடைக்கும்

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் நாம் உப்பு வைத்திருக்கும் பீங்கான் ஜாடியில் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து உப்பை கொட்டுவதன் மூலம் நமக்கு பணவரவு அதிகரிக்கும். பண வரவு அதிகரித்தாலே கடன் பிரச்சினை தீரும் அல்லவா.
பணவரவை அதிகரிக்கக்கூடிய இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். மேலும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். கண் திருஷ்டி ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்து கடன் மற்றும் கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றல்களில் இருந்து வெளியே வரலாம்.

சற்று முன்