கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் எல்லோரும் இன்றைய தினம் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இன்று தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது. இந்த நாளில் பழமையான எல்லா சிவன் கோவில்களிலும் மாலை, கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
இதில் கலந்துகொண்டு உங்கள் கடன் சுமை குறைய வேண்டும், காலத்தால் வரும் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் கால பைரவா, என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தகவலை இன்று நினைவுகூர்ந்து ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
கடன் தீர்க்க சிறப்பு பரிகாரம்
இன்று வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை அஷ்டமி திதி. குரு அருள் கிடைத்துவிட்டால் போதும் நம்முடைய பணக்கஷ்டம் எல்லாம் தீரும் என்று சொல்லுவார்கள். அந்த குருவுக்கே உரிய வியாழக்கிழமை நாளில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்திருப்பதால், இன்று இரட்டிப்பு பலன். இன்றைய தினம் எப்பாடுபட்டாவது வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டுங்கள்.
வட்டி பணத்தை கையில் வைத்துக் கொண்டு, கால பைரவா, இந்த வட்டி கட்ட கூடிய சூழ்நிலை இன்றுடன் அடியோடு மாற வேண்டும், வாங்கிய அசல் தொகையையும் சீக்கிரம் திருப்பி கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு வட்டியை திருப்பிக் கொடுங்கள்.
குறிப்பாக இன்று மாலை 4:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள் இந்த வேண்டுதலை வைத்து வட்டி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் சரி அல்லது நகை அடமானம் வைத்திருந்தாலும் சரி, அல்லது யாராவது தனிநபரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.
வங்கியில் மாலை நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த சமயத்தில் ஒரு வெள்ளை கவருக்கு மேலே வங்கியின் பெயரை எழுதிவிட்டு, அந்த கவருக்குள் வட்டி பணத்தை போட்டு வைத்து விடுங்கள். அது வங்கியில் செலுத்திய கணக்கில் வந்துவிடும்.
இன்றைய தினம் நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டினால், அசல் தொகையையும் சீக்கிரம் திருப்பி கட்டக்கூடிய அதிர்ஷ்ட நேரம் வந்துவிடும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வட்டியை கட்டி முடித்த கையோடு பத்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி உங்கள் வீதியில் திரியும் நாய்களுக்கு போட்டு விடுங்கள். அந்த பைரவரின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைத்துவிடும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர கல் உப்பு பரிகாரம்
இன்றைய தினம் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அடுத்த தேய்பிறை அஷ்டமி திதிக்குள் நிதி நிலைமை தலைகீழாக மாறும். கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. காலபைரவரை வேண்டி, கால பைரவர் பாதத்தை பற்றி கொண்டவர்களுக்கு என்றுமே ஏமாற்றம் இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.