மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பல வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொண்டு வருவோம். காரணம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்றவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. அப்படி குறைகள் அற்ற மனநிறைவுடனும் செல்வ செழிப்புடனும் வாழ்வதற்கும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் வீட்டில் தினமும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக மகாலட்சுமி வீட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை நாம் செய்வோம். ஒரு முறை மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் வீட்டை விட்டு போய் விடுவாள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவளை நாம் தினமும் நம் வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும் அல்லவா? அப்படி அவளை தினமும் வீட்டிற்கு வரவழைப்பதற்கு மிகவும் செலவே இல்லாத எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
செல்வ வளம் பெருக துளசி தீப வழிபாடு
மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யக்கூடிய இடங்களாக சில இடங்கள் கருதப்படுவது. மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் துளசி செடி. துளசி செடியில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் துளசிச் செடியில் மகாவிஷ்ணுவும் வீற்றிருக்கிறார்கள், அப்படிப்பட்ட துளசி செடி நம்முடைய வீட்டில் இருக்கும் பட்சத்தில் அந்த துளசி செடியை நாம் முறையாக வழிபட்டோம் என்றால் மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
மேலும் மகாவிஷ்ணுவிற்கு இந்த துளசியை நாம் சாற்றுவதன் மூலம் அவரின் அருளை பரிபூரணமாக பெற்று வேண்டிய வரத்தை வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த துளசியை வைத்து தீபம் ஏற்றி வர நமக்கு மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதற்கு பெரிதாக நாம் எந்தவித செலவு செய்ய வேண்டியது இல்லை. தினமும் காலையில் பூஜையறையில் விளக்கேற்றி வழிபடுவோம் அல்லவா அவ்வாறு விளக்கேற்றும் பொழுது இந்த விளக்கை சேர்த்து ஏற்ற வேண்டும். ஒரு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரே ஒரு இலை மட்டும் துளசி இலையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அவ்வளவுதான் இப்படி தினமும் நாம் புதிதாக ஒவ்வொரு இலையைப் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வேண்டும். அந்த தீபம் எறியும் பொழுது துளசியின் பாசம் வீடு முழுவதும் வீசும்.
இப்படி வீசுவதால் மகாலட்சுமி தாயார் எங்கு இருந்தாலும் இந்த துளசியின் வாசத்திற்கு ஓடோடி வந்து விடுவாள். இந்த விளக்கை நாம் தினமும் ஏற்றும் பட்சத்தில் மகாலட்சுமி தினமும் நம் வீட்டிற்குள் வருவாள். அப்படி மகாலட்சுமி தாயார் வரும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நிலை அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உயர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க வாராஹி மந்திரம்
செலவே இல்லாத இந்த எளிமையான தீப வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.