- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல்கள் விலக பரிகாரம்

எதிர்மறை ஆற்றல்கள் விலக பரிகாரம்

- Advertisement -

ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் வந்து விட்டால் அந்த வீட்டில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் ஏற்படும். அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரவேண்டும் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்க வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் அதிகரித்துக் கொண்டே சென்றால் வீட்டில் இருக்கக் கூடிய நேர்மறை ஆற்றலான தெய்வீக சக்தி வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த எதிர்மறை ஆற்றலானது தோஷமாகவும், தீய சக்தியாகவும் மாறி மிகப்பெரிய பாதிப்பை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும். அதனால் இந்த எதிர்மறை ஆற்றலை அவ்வப்பொழுது நாம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எதிர்மறை ஆற்றலை விலக்குவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அன்றைய காலத்தில் திதி அறிந்து தான் ஒவ்வொரு செயல்களையும் செய்வார்கள். அந்த திதிக்கேற்றவாறு நம்முடைய செயல்களை நாம் செய்யும் பொழுது அதில் நமக்கு வெற்றிகள் கிடைக்கும். அந்த வகையில் அமாவாசை திதி அன்று வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்காக எலுமிச்சை பழம், தேங்காய், பூசணிக்காய் என்று சுற்றி உடைக்கும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது அமாவாசை தினத்தன்று வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை இந்த முறையில் நாம் நீக்கினால் அவை முழுமையாக நீங்கிவிடும் என்பது தான். இதே போல் தான் இன்றைய தினமும் திகழ்கிறது.

- Advertisement -

ஏகாதசி, துவாதசி, தியோதசி என்ற மூன்று திதிகளும் இன்றைய தினம் வருகிறது அதே போல் ரேவதி, அஸ்வினி, பரணி போன்ற மூன்று நட்சத்திரங்களும் இன்றைய தினத்தில் வருகிறது. இதை முத்திதிநாள் என்றும் முக்கூட்டு நட்சத்திர நாள் என்றும் கூறுவோம். இந்த தினத்தில் நாம் கல் உப்பை வைத்து எளிமையான இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது.

எதிர்மறை ஆற்றல் விலக பரிகாரம்

இதற்காக நாம் பெரிதும் செலவு செய்ய வேண்டியது இல்லை. வீட்டில் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கல்லுப்பு மட்டும் இருந்தால் போதும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும் இடமாக கருதப்படுவது படுக்கை அறையும், குளியல் அறையும் தான். அதனால் இந்த கல்லுப்பு பரிகாரத்தை நாம் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது மண்ணாகவும் இருக்கலாம் அல்லது நாம் பிரசாதம் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தும் தொன்னையாகவும் இருக்கலாம். அது உங்களுடைய வசதி. அது நிறைய கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். இதை அப்படியே கொண்டு போய் உங்களுடைய வீட்டுக் குளியலையில் வைத்து விட வேண்டும். மற்றொன்றை இதே மாதிரி செய்து உங்கள் வீட்டின் படுக்கை அறையில் வைத்து விட வேண்டும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன் வைத்து விடுங்கள். தொடர்ந்து 21 நாட்கள் இந்த உப்பு அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். அதை எடுக்கவும் கூடாது, மாற்றவும் கூடாது. குளியலறையில் வைக்கும் உப்பானது நாம் குளிக்கும் தண்ணீர் படாத இடமாக பார்த்து வைக்க வேண்டும். 21 நாட்கள் கழிந்த பிறகு இந்த உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். 21 நாட்களில் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகல விதமான பிரச்சனைகளும் தீர கருட மந்திரம்

இந்த உப்பு பரிகாரத்தை இன்றைய தினம் முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய இல்லத்தில் எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் எதிர்மறையாற்றலாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி விடும்.

சற்று முன்