- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருச்செந்தூர் முருகன் கோவிலில் சொல்ல வேண்டிய மந்திரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

எல்லோரும் சொல்கிறார்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று. நானும் திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு சென்று வந்தேன். ஆனால் எனக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேங்குதே. அப்படின்னு நீங்க யோசிக்கிறீங்களா. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக தான்.

எதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அந்த முருகப்பெருமானை ஒரு முறை தரிசனம் செய்யுங்கள். கூடவே சேர்த்து அந்த கோவிலில் அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் வரும்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகர் தரிசனம்

கோபத்தையும் ஆணவத்தையும் அழிக்கக்கூடிய ஸ்தலம் தான் திருச்செந்தூர். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் உங்களுடைய ஆணவமும் கோவமும் அன்றோடு அழிந்து விட வேண்டும். கோபத்தையும் ஆணவத்தையும் தொலைக்கக் கூடிய இடம் தான் திருச்செந்தூர் முருகன் கோவில்.

ஒரு மனிதனுக்கு கோபமும் ஆணவமும் இல்லை என்றால், அவன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவான். அவன் வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கும். எவன் ஒருவன் கோபத்தோடும் ஆணவத்தோடும் அதிகாரத்தோடும் திரிகின்றானோ, அவன் வாழ்க்கையில் அழிந்து போவான். இதுதான் வாழ்க்கை தத்துவம். இதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும். இது தெரியாமல் வெறுமனே திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு, உங்கள் ஆணவத்தையும் கோபத்தையும் உங்களுடனே வைத்து, மீண்டும் வீடு திரும்பி வாழ்க்கையை நடத்தினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் நாழிக்கிணரில் குடிக்க வேண்டுமா? அல்லது கடலில் குளிக்க வேண்டுமா என்ற சந்தேகம் இன்னும் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. இதில் சூட்சமமான ஒரு ரகசிய உண்மை மறைந்திருக்கிறது. பொதுவாகவே உப்பு தண்ணீரில் குளித்த பிறகு நல்ல தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

- Advertisement -

இப்போது மேலே எழுப்பப்பட்ட கேள்விக்கு உண்டான பதில் உங்களுக்கே தெரியும். உப்பு தண்ணீரான கடலில் முதலில் குளித்துவிட்டு வந்து, உள்ளே நாழிக்கிணறில் சுரக்கும் நல்ல தண்ணீரில் குளித்தால் நல்லது.

சரிங்க, திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமர்ந்து எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமர்ந்து உங்களுடைய ஆணவத்தையும் கர்வத்தையும் கோபத்தையும் அந்த முருகப்பெருமான் பாதத்தில் போட்டுவிட்டு முருகா என்னை காப்பாற்று என்று சொல்லி ‘நமஹ நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

ந என்றால் நன்றிகள், ம என்றால் மன்னிப்பு. நன்றிகளையும் மன்னிப்பையும் மீண்டும் மீண்டும் சொல்லி, உங்களிடம் இருக்கும் ஆணவக் குணத்தையும் கோபத்தையும் அழித்து விட்டீர்கள் என்றால், இந்த பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கும். அதற்கு துணையாக அந்த முருகப்பெருமான் நிற்பான்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வில்வாபிஷேகம்

இன்னொரு முறை திருச்செந்தூர் முருகன் கோவில் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் மேலே சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறுங்கள், அல்லது இப்போதுதான் புதுசாக முதன்முறையாக அந்த திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்யப் போகிறீர்கள், இந்த பதிவை படித்த பின்பு உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்ய அதிக ஆர்வம் வந்தால் அது, இந்த பதிவிற்கு கிடைத்த பாக்கியம். எல்லோருக்கும் அந்த திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டுதல் வைத்து, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்