- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval06-06-2024 அமாவாசை சோடசக்கலை நேரம்

06-06-2024 அமாவாசை சோடசக்கலை நேரம்

- Advertisement -

அமாவாசை திதி முடியும் நேரத்தில் வரக்கூடிய நேரம் தான் சோடசக்கலை நேரம். 16 லட்சுமிகளும் ஒன்றாக சேர்ந்து ஆசீர்வதிக்கக்கூடிய நேரம் இந்த சோடசக்கலை நேரம். 6-6-2024 வியாழக்கிழமை, இன்று வைகாசி மாத அமாவாசை திதி இருக்கிறது. எல்லோரும் அவர்களுடைய வீட்டில் முன்னோர்கள் வழிபாட்டை சிறப்பாக செய்து முடித்திருப்பீர்கள்.

இந்த அமாவாசை தினத்தில் வரக்கூடிய சோரசக்கலை நேரத்தை சரியாக பயன்படுத்தினால், கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கோடிக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்கள் அந்த கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்றைய தினம் அமாவாசை சோடசக் கலை நேரம் எப்போது வருகிறது. அந்த நேரத்தில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அமாவாசை சோடசக்கலை நேரம்

6-6-2024 ஆம் தேதி வியாழக்கிழமை, இன்று மாலை 5:40 மணியிலிருந்து 7:40 மணி வரை சோடசக்கலை நேரம் இருக்கிறது. இந்த இரண்டு மணி நேரமும் நீங்கள் தியானத்தில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிலேயே அமைதியாக இருக்கும் ஒரு இடத்தில் கீழே ஒரு விரிப்பு விரித்துக் கொள்ளுங்கள். அதன் மேலே அமர்ந்து சொல்லுங்கள். உங்களுடைய தேவை என்ன.

ஏதாவது ஒரு தேவையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், இப்படி ஏதாவது வேண்டுதல் இருந்தாலும் சரி, அந்த பிரார்த்தனையை மட்டும் மனதில் சொல்லிக் கொண்டே தியானத்தில் ஈடுபட வேண்டும். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் வாசனை நிறைந்த ஊதுவத்தி அல்லது மண் அகல் விளக்கு ஏதாவது ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மனது ரொம்பவும் அலை பாய்கிறது, மனசை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்றால் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மட்டும் சொல்லிக் கொண்டு இந்த நேரத்தில் பிரார்த்தனை வைக்கலாம். ரொம்பவும் கடன், பெரிய அளவில் இருக்கிறது. அந்த கடன் அடைய வேண்டும் என்றால் அந்த கடனை சீக்கிரம் திருப்பி தர வேண்டும் என்ற பிரார்த்தனையை இந்த நேரத்தில் வைக்கவும்.

இந்த இரண்டு மணி நேரத்தில் 5 சொடக்கு போடக்கூடிய, ஐந்து வினாடிகள் தான், சோடசக்கலை நேரமாக வரும். ஆனால் அந்த ஐந்து வினாடி எது என்பது நமக்கு தெரியாது. இந்த இரண்டு மணி நேரத்தையும் முழுசாக பயன்படுத்தும் போது, அந்த ஐந்து வினாடிகளினா பலனை கடவுள் நமக்கு கொடுப்பான்.

இதையும் படிக்கலாமே: கிரக தோஷம் விலக ஆஞ்சநேயர் வழிபாடு

அமாவாசை திதியில் வரக்கூடிய இந்த ஷோடசக்கலை நேரத்தை பயன்படுத்தி நிறைய பேர் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவந்துள்ளார்கள். நிறைய பேர் தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்