வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் தங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையை உடனடியாக நீக்குவதற்கும், பியூட்டி பார்லர் போகாமலேயே முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய ஒரு எளிமையான பேஸ் பேக். இந்த பேஸ் பேக்கை ஆண்களும் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட பேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக ஒருவருடைய முகம் பொலிவிழந்து கருமை அடைந்திருக்கிறது என்றால் அந்த கருமையை நீக்குவதற்கு பல வழிகளை பின்பற்றலாம். அதில் பலரும் பின்பற்றுவது கெமிக்கல் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்துவது தான். அதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகளை நீக்க வேண்டும்.
இந்த ஒரு ஃபேஸ் பேக்கை நம்முடைய முகத்தில் நாம் தடவுவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கி உடனடி பொலிவைத் தரும். திருமண காலமாக இருக்கக்கூடிய இந்த காலத்தில் திடீரென்று வீட்டிலிருந்து வெளியே கிளம்ப வேண்டும் என்று நினைக்கும் பொழுது தங்கள் முகத்தில் இருக்கும் கருமையின் காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியே வர யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் 15 நிமிடத்தில் தங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி பொலிவான முகத்தை பெற முடியும்.
இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது முல்தானி மெட்டி. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து, அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே உலர விடுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ச்சியான நீரினால் கழுவ வேண்டும். உடனடியாக 15 நிமிடத்தில் முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி முகத்தை பொலிவுடன் மாற்றிவிடும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள முல்தானி மெட்டி, தேன், எலுமிச்சை இவை மூன்றுமே இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பு தரக்கூடிய பொருள்களாக திகழ்கின்றன. அதனால் இதை எந்தவித தயக்கமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: பாதாம் பிசின் ஹேர் மாஸ்க்
மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி பொலிவான முகத்தோற்றத்தை பெற முடியும்.