- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமண தடை நீங்கவும் தொழில் முன்னேற்றகரமாகவும் நடைபெற உதவும் செடி

திருமண தடை நீங்கவும் தொழில் முன்னேற்றகரமாகவும் நடைபெற உதவும் செடி

- Advertisement -

இயற்கையையே தெய்வமாக நினைத்து வழிபட்டவர்கள் நம்முடைய முன்னோர்கள். இன்றைய காலத்தில் பலரும் அந்த இயற்கையை மறந்து விட்டார்கள். ஆனால் ஆன்மீகவாதிகள் தெய்வத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு செடி, மரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் தெய்வீக அம்சம் பொருந்திய செடிகள் என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் வழிபாடுகளையும் பூஜைகளையும் செய்யும் பழக்கம் இன்றளவும் பலரிடம் இருந்து வருகிறது.

அதனால் தான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஆலயத்தை சுற்றி பலவிதமான மூலிகை செடிகளை வைத்து வழிபட்டனர். அந்த செடிகளை பயன்படுத்தி பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில் திருமணத்தடை நீங்கவும் தொழில் சிறப்பாக நடைபெறவும் எந்த செடியை வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

திருமண தடை விலக தொழில் சிறப்பாக நடைபெற பரிகாரம்

தெய்வம்சம் பொருந்திய செடிகள் என்று பல செடிகள் இருக்கும். அந்த செடிகளில் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய செடி எது என்பதை தெரிந்து அதற்குரிய வழிபாடுகளை நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த ஆண்டுகளாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு திருமணம் விரைவிலேயே நடைபெற வேண்டும் என்றால் அவர்கள் பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள்.

- Advertisement -

இப்படி செய்வதோடு ஒரு செடியையும் நாம் வழிபட வேண்டும். இந்த செடியை வெள்ளிக்கிழமை அன்றுதான் வழிபட வேண்டும். எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து ஒரு செம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சளை கொட்டி கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த மஞ்சள் கலந்த தண்ணீரை அந்த செடிக்கு உங்கள் கைகளால் ஊற்றி அந்த செடியை 9 முறை வலம் வந்து விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை அந்தச் செடியை நாம் வழிபட்டோம் என்றால் திருமண தடை என்பது விலகும். அந்தச் செடிதான் வெள்ளெருக்கு செடி.

- Advertisement -

வெள்ளருக்கு என்பது விநாயகருக்குரிய செடியாக கருதப்படுகிறது. இந்த வெள்ளருக்கு செடியை நாம் வழிபடுவது விநாயகரை வழிபடுவதற்குரிய பலனைத் தரும். மேலும் இது உயிரோட்ட மிகுந்த செடியாகவும் கருதப்படுவதால் இந்த செடியை நம் முழு மனதோடு இப்படி வழிபட திருமண தடை விலகும்.

இதே செடிக்கு தொழில் செய்பவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். தொழில் சிறப்பாக நடைபெறும். எந்த ஒரு காரியத்திற்கு செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றால் இந்த வெள்ளெருக்கு இலையை பறித்து உடன் வைத்துக்கொள்ள விநாயகப் பெருமானே நம்முடன் இருப்பதாக பொருள்படும். அதனால் செல்லும் காரியத்தில் நமக்கு வெற்றிகளே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக கிரிவல சூட்சமம்

மிகவும் அற்புதமான சக்திவாய்ந்த இந்த வெள்ளருக்கு செடியை இந்த முறையில் வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய திருமண தடை விலகி தொழில் சிறப்பாக நடைபெறுவதோடு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்னும் தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

சற்று முன்