- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகனை வசியம் செய்யும் மாலை.

முருகனை வசியம் செய்யும் மாலை.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை வரிசையாக எழுதிப் பார்த்தால், எழுதுவதற்கு பேனாவும் இருக்காது. நோட்டுப் புத்தகமும் இருக்காது. ஏனென்றால் அத்தனை பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். வாழ்க்கையில் வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் பாதத்தைப் பற்றிக் கொள்வதை தவிர வேறு வழியே கிடையாது.

உங்கள் கணவருக்கு வருமானம் சரியாக இல்லையா. நல்ல வேலை கிடைக்கவில்லையா. பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையா. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன கஷ்டம் இருக்கிறதா. கடன் சுமையால் கண்கலங்கி நிற்கிறீர்களா. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார்களா, எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, முருகப்பெருமானுக்கு உங்கள் கையால் இந்த ஒரு மாலையை கட்டி போடுங்கள்.

- Advertisement -

அந்த கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். அது என்ன மாலை எந்த கிழமையில் முருகருக்கு போட்டால் நல்லது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

முருகரை வசியம் செய்ய மாலை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் மரிக்கொழுந்து. நீங்க மரிக்கொழுந்து வாசம் நிறைந்த வாசனை திரவியத்தை சட்டை மேலே பூசிக்கொண்டு போனால் கூட நீங்கள் சென்ற காரியம் நல்லபடியாக வெற்றி அடையும். இனி வியாபாரத்திற்கு செல்லும் போது அலுவலகத்திற்கு செல்லும் போது கொஞ்சமாக மரிக்கொழுந்து பர்ஃபியும் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

திருமணமோ காதுகுத்தோ அல்லது வேறு ஏதாவது நல்ல விசேஷங்கள் வருகிறதா உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு மரிக்கொழுந்து செடியை பரிசாக கொடுங்கள். பரிசாக மரிக்கொழுந்து செடியைப் பெற்ற குடும்பமும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையும். மரிக்கொழுந்து செடியை பரிசாக அடுத்தவர்களுக்கு கொடுத்த உங்களுடைய நல்ல மனசுக்கு உங்கள் குடும்பத்திலும் நல்லது நடக்கும். மரிக்கொழுந்து பெர்ஃபியூம்மை வாங்கிக் கூட அடுத்தவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்.

இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். ஒரு மரிக்கொழுந்து கட்டை வாங்கி கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற நூலால் இந்த மரிக்கொழுந்தை கிள்ளி கிள்ளி வைத்து சின்னதாக மாலையாக கட்டி இதை உங்கள் வீட்டில் இருக்கும் முருகரின் திருவருவப்படத்திற்கு போட்டு உங்களுடைய பிரார்த்தனையை வைத்தால் வைத்த வேண்டுதல் உடனடியாக பலிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் மல்லிப்பூவுடன் மரிக்கொழுந்தை வைத்து கட்டி தான் பெண்கள் தலையில் சூடி கொள்வார்கள். அந்த வாசத்திற்கு அத்தனை வசிய தன்மை இருக்கிறது. மகாலட்சுமி வசிய தன்மையும் இந்த மரிக்கொழுந்து இருக்கிறது. இந்த வாசம் முருகப்பெருமானுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே: இலவசமாக தரக்கூடாத பொருட்கள்

ஒரு செவ்வாய்க்கிழமை, வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள இந்த மரிக்கொழுந்து மாலையை கட்டி உங்கள் கையால் முருகப்பெருமானுக்கு போட்டுத்தான் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையில் நறுமணம் வீசத் தொடங்கி விடும். மல்லிகை பூவோடு மரிக்கொழுந்தை சேர்த்து கட்டி மகாலட்சுமி தாயாருக்கும் மாலையாக போடட்டாள் ரொம்ப ரொம்ப நல்லது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். ஆன்மீகம் சார்ந்த மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்