- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇழந்ததை திரும்ப பெற மந்திரம்

இழந்ததை திரும்ப பெற மந்திரம்

- Advertisement -

ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து தான் வாங்குவோம். அவ்வாறு வாங்கும் பொழுது வாங்கி வைக்கக்கூடிய பொருட்கள் நம்மிடமே பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் பார்த்துக் கொள்வோம். இருப்பினும் அதை யாராவது ஒருவர் நம்மிடம் இருந்து திருப்பித் தருகிறேன் என்று வாங்கிச் சென்றாலும் வாங்கிச் சென்று திரும்ப தராமல் விட்டு விட்டாலோ அல்லது நம்மை ஏமாற்றி விட்டாலோ அதன் வலி என்பது மிகவும் அதிகமாக இருக்கும்.

அதே போல் நாம் நம் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கும் பொருட்களும், பணமும், நகையும் களவு போய்விட்டாலும் அதை திரும்ப பெறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நம்முடைய கையை விட்டு வெளியே சென்று விட்டது என்னும் சூழ்நிலையில் நாம் எந்த தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தால் அந்த பொருட்கள் நம்மிடம் வந்து சேரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இழந்ததை திரும்ப பெற மந்திரம்

பெருமாளின் சக்கரத்தில் இருக்கக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர் தான் கார்த்தவீர்யார்ஜுனர். இவரை நாம் வழிப்படுவதால் நமக்கு இழந்த பொருட்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவரை நாம் வழிபடுவதற்கு என்று தனியாக எந்தவித வழிமுறைகளும் கிடையாது. இவருடைய மந்திரத்தை அனுதினமும் நம் உச்சரித்தாலே போதும்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு பாராயணம் செய்யும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மிடம் இருக்கக்கூடிய பொருட்களை வாங்கிச் சென்றவர்களே திரும்ப நம்மை தேடி வந்து ஏமாற்றியதற்குரிய மன்னிப்பையும் கேட்டுவிட்டு ஏமாற்றிய பொருளையும் நம்மிடமே கொண்டு வந்து ஒப்படைத்து விடுவார்கள்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் பொருட்கள் களவு போயிருந்தாலும் இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கலாம். அப்படி உச்சரிக்கும் பொழுது களவு போன பொருளை திரும்பப் பெறுவதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த பொருட்கள் நம்மிடமே வந்து சேரும்.

இழந்த பொருட்களுக்கு மட்டும்தான் இந்த மந்திர வழிபாடா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை. வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும். அதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

மந்திரம்
ஓம் ப்ரோம் ப்ரீம் க்லீம் ப்ரும்
ஆம் க்ரீம் க்ரோம் ஸ்ரீம் ஹும்பட்
கார்த்தவீர்யார்ஜுனாய நம

இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் பேஜ மந்திரத்திற்கு உட்பட்டவை என்பதால் இதனை உச்சரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

இதையும் படிக்கலாமே: சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்

சரியாக உச்சரித்து கார்த்தவீர்யார்ஜுனரை முழு மனதுடன் நம்பி சரியான முறையில் உச்சரித்து வருபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் இழந்த அனைத்தும் அவர்களைத் தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்