கோதுமை மாவு நம்முடைய முகத்தில் பூசும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் சரியாகி விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் சரியாகி ஒரு மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன. முகத்தை நன்றாக பள பளவென்று வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அற்புதம் பொருளாக உள்ளது. குழந்தைகளுக்கு உடம்புக்கு குளிக்கும் பொழுது தேய்த்து குளிப்பாட்டினால் மென்மையான தோல் அமைப்பு கிடைக்கும். இதில் சில மூலிகைகளை சேர்த்து செய்யும் பொழுது கிடைக்கக் கூடிய பலன்கள் நாம் இப்பொழுது இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் பார்க்கலாம்.
ஃபேஸ் கிளென்சிங்
கிளென்சிங் பண்ணும் பொழுது நம்முடைய முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீக்கப்படும். காய்ச்சாத பால் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பிறகு ரோஸ் வாட்டர் ரெண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்படும். மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படும். இதை ஐந்து நிமிடம் வரை வைத்து இருக்க வேண்டும்.
ஃபேஸ் பேக்
கோதுமை மாவு நான்கு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன் காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து கொள்ளவும். பிறகு அந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் நன்கு காய விட வேண்டும்.
நன்கு காய்ந்த பிறகு நம் இரு கைகளைக் கொண்டு மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணி எடுத்து மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் மட்டும் போதும். இதில் எந்தவித கெமிக்கல் கிடையாது.
அதனால் நம்முடைய முகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது நம்முடைய வீட்டில் ஹோம் ரெமடியாக செய்யக்கூடிய ஒரு பேக். இதை செய்துவிட்டு நம்முடைய முகத்தை தொட்டுப் பார்க்கும் பொழுது அவ்வளவு மென்மையாக தெரியும்.
கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மஞ்சளை கலந்து நம்முடைய உடம்பில் தேய்த்து குளித்து வர உடம்பில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும். அது மட்டுமல்லாமல் உடம்பில் உள்ள தோல்கள் மென்மையாக இருக்கும். கோதுமை மாவை நம்முடைய தலைக்கு கூட தேத்து வரலாம் ஆனால் சில பேர் தலைக்கு தேய்ப்பதற்கு பயப்படுவார்கள். தலைக்கு தேய்த்து வர முடிகள் வலுபெறும்.
இதையும் படிக்கலாமே: ஹேர் டை ஆயில் தயாரிக்கும் முறை
அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய கோதுமை மாவை வைத்து நம்முடைய சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.