இன்றைய காலத்தில் பணமே வாழ்க்கையின் பிரதானமாக திகழ்கிறது. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. இந்த பண தேவை என்பது அனைவருக்கும் ஏதாவது ரூபத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு சிறிய தொகையாக இருக்கும். ஒரு சிலருக்கு பெரிய தொகையாக இருக்கும்.
அப்படி பண தேவைகள் ஏற்படும் நேரத்தில் தங்களிடம் பணம் இல்லை என்றாலோ அல்லது பிறரிடம் இருந்து பணத்தைக் கேட்டு அந்த பணம் கிடைக்கவில்லை என்றாலும், நம்முடைய பணமே நமக்கு வர வேண்டி இருக்கிறது வரவில்லை என்று இருந்தாலோ இந்த எளிமையான வழிபாட்டை நாம் செய்யலாம். வன்னி மரத்தை எப்படி வழிபட்டால் பணவரவு உண்டாகும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பணம் சேர வழிபாடு
விருட்ச சாஸ்திரம் என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது. அதாவது மரங்களைப் பற்றிய சாஸ்திரங்கள். எந்தெந்த மரத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது, எந்தெந்த மரத்தை எந்தெந்த நாளில் எப்படி வழிபட்டால் என்ன நன்மைகள் உண்டாகும் என்று பல வகைகளில் பல மரங்களைப் பற்றி கூறிய சாஸ்திரத்தை தான் நாம் விருட்ச சாஸ்திரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட விருட்ச சாஸ்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது.
இந்த பரிகாரத்தை காலையில் செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் செய்யக்கூடாது. இந்த பரிகாரத்திற்கு நாம் வன்னி மரம் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக சிவ ஆலயங்களில் வன்னி மரம் அதிக அளவில் இருக்கும். ஒரு சில விஷ்ணு ஆலயங்களிலும் இந்த மரம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. எந்த இடத்தில் இந்த மரம் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு சந்திராஷ்டம இல்லாத நாளாக பார்த்து இந்த வழிபாட்டை தொடங்குங்கள்.
காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய டப்பாவில் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு கருப்பு எள், சிறிதளவு வெல்லம் இவை மூன்றையும் நன்றாக கலந்து வன்னி மரம் இருக்கும் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு ஆலய வழிபாடு அனைத்தையும் முடித்துவிட்டு வன்னி மரம் இருக்கும் இடத்திற்கு வந்து வன்னி மரத்தடியில் எடுத்துச் சென்ற கல் உப்பு, எள் மற்றும் வெல்லத்தை போட வேண்டும்.
பிறகு அங்கு ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது கடுகு எண்ணெயில் ஏற்ற வேண்டும். இரண்டு பஞ்சுத் திரிகளைப் போட்டு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி ஏற்றி வைத்துவிட்டு வன்னி மரத்தை 11 முறை வலம் வர வேண்டும். இதே போல் தொடர்ந்து 11 நாட்கள் நாம் செய்து வர நம்முடைய பண தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய வழிகள் அந்த பதினோரு நாள் குள்ளேயே கிடைத்துவிடும்.
இதையும் படிக்கலாமே: 20-09-2024 மைத்ரேய முகூர்த்த நேரம்
உயிருள்ள பொருளாக கருதப்படும் மரத்தை நாம் தெய்வமாகவே பாவித்து இந்த முறையில் நம்பிக்கையுடன் வழிபாடு செய்ய நம்முடைய பண தேவைகள் நிறைவடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.