ஒரு சில பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும், அதிர்ஷ்டத்தால் அவர்களுக்கு எல்லா நல்லதும் நடக்கும். ஒரு சில பேருக்கு அதிர்ஷ்டம் இருக்காது. ஆனால் அவர்களிடம் கடின உழைப்பு இருக்கும். இருந்தும் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாமல் துன்பப்பட்டு துயரப்பட்டு தோல்வி அடைந்து முடங்கிப் போய் இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடைய துரதிஷ்டத்தை துரத்தி விட்டு, அதிர்ஷ்டத்தை தூண்டி விட எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
துரதிஷ்டத்தை துரத்தி அடிக்கும் சுவிட்ச் நம்பர்
துரதிஷ்டத்தை துரத்தி அடிக்கும் சுவிட்ச் நம்பர் என்றும் இதை சொல்லலாம். அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொண்டு வந்து தரும் சுவிட்ச் நம்பர் என்றும் இதை சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம். இப்ப அந்த நம்பர் என்னன்னு முதல்ல நம்ம பார்த்திடலாம். பிறகு அந்த நம்பரை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்பதையும் பார்த்து விடுவோம். இதுதான் அந்த அதிர்ஷ்டம் தரக்கூடிய சுவிட்ச் நம்பர் 352541476.
ஒரு அகலமான பாத்திரத்தில் குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வலது கை, ஆள்காட்டி விரலால் இந்த நம்பரை எழுதுங்கள். ஒரு நிமிடம் கழித்து அந்த தண்ணீரை ஒரு வாட்டர் பாட்டிலிலோ அல்லது ஒரு சொம்பிலோ ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் நீங்கள் குடிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்துங்கள் உங்கள் உடம்புக்குள், இருக்கக்கூடிய எனர்ஜி லெவல், வேற லெவலில் வேலை செய்யும்.
துரதிஷ்டத்துடன் இருக்கக்கூடிய உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கிவிடும். இதை எத்தனை நாள் செய்வது. என்றைக்கு தொடங்குவது எந்த சந்தேகமும் உங்களுக்கு தேவையில்லை. என்றைக்கு வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை தொடங்கலாம்.
எத்தனை நாள் வேண்டும் என்றாலும் இப்படி இந்த நம்பரை தண்ணீரில் எழுதிக் குடிக்கலாம். இடையில் ஓரிரு நாள் இதை பின்பற்றாமல் விட்டாலும் தவறு கிடையாது. இந்த நம்பரை எழுதி அந்த தண்ணீரை குடிக்கும் போது உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அந்த பாசிட்டிவ் எனர்ஜி அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும்.
இதையும் படிக்கலாமே: சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்
தொடர் தோல்வியை சந்திப்பவர்கள், வேலை இருந்தும் அதை செய்ய முடியாமல் சோம்பேறி தனத்தோடு இருப்பவர்கள், நேரத்தை அனாவசியமாக வீணடிப்பவர்கள், எல்லாம் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கத் தொடங்கிவிடும். உங்களை அறியாமலேயே நீங்கள் வேலை செய்ய தொடங்கி நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.