- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னேற்ற தடை விலக பரிகாரம்

முன்னேற்ற தடை விலக பரிகாரம்

- Advertisement -

நம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களிடத்திலும் இருக்க வேண்டும். முன்னேற வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு முயற்சியை எடுப்போம். ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள் ‘இதை நீ செய்யாதே, இதை செய்தால் தோற்றுப் போவாய், நஷ்டம் ஆகும், உன்னால் இது முடியாது’. என்று உங்களை மட்டம் தட்டி பேசுபவர்கள்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் உங்களை சுற்றி இருந்தால் உங்களால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற முடியாது. இவர்கள் உங்களுடைய நலன் விரும்பிகளாக இருக்க மாட்டார்கள். இவர்கள்தான் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். கூடவே இருந்து குழி பறிக்கக் கூடிய இப்படிப்பட்டவர்களை நம்மிடம் இருந்து பிரித்து வைக்க என்ன வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முன்னேற்ற தடை விலக வழிபாடு

உங்களை தரம் தாழ்த்தி பேரு பேசுபவர்களையும், உங்களை மட்டம் தட்டி பேசி, குட்டி குட்டி குனிய வைப்பவர்களையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது உங்களை எப்போதுமே டிமோடிவ் செய்பவர்கள், உங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

உதாரணத்திற்கு மனைவி சம்பாதிக்க வேண்டும் என்று எந்த முயற்சியை எடுத்தாலும் கணவர் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்பார். கணவர் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மனைவி முட்டுக்கட்டையாக நிற்கலாம். அந்த முட்டுக்கட்டையை தவிர்க்கவும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரத்தில் செய்ய வேண்டும். 9 வாரம் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். எல்லோர் வீட்டிலும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு பூஜை செய்வீர்கள் அல்லவா. அந்த சமயம் உங்களுடைய வலது கையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் அல்லது சந்தனம் ஏதாவது ஒரு பொருளை தண்ணீரில் கரைத்து அதை உங்கள் இடது கையின் மூலமாக, வலது கையில் வரைந்து கொள்ளலாம் தவறு கிடையாது. வரையப்பட்ட சுவஸ்திக் சின்னம் லேசாக அழிந்தாலும் தவறு கிடையாது. சின்னம் வரையப்பட்ட உள்ளங்கையோடு, இரு கைகளை கூப்பி மகாலட்சுமியை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்னுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்னை விட்டு தூர விலகிச் செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக, உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுபவர்கள், உங்களை விட்டு விலகி நிற்பார்கள்.

பெண்கள் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். சில வீட்டில் தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற விடாதபடி தந்தையே முட்டுக்கட்டையாக இருப்பார். அப்படி ஏதாவது நியாயமான கோரிக்கை இருந்தால் ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் வைக்கவே கூடாத பொருள்

நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்புமிக்க இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கும் இருக்கும் தடைகள் விலகும். வெள்ளிக்கிழமை காலை 6-7,  மதியம் 1-2, இரவு 8-9 சுக்கிர ஹோரை நேரம் வருகிறது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்