- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்எளிமையான வீட்டு குறிப்பு

எளிமையான வீட்டு குறிப்பு

- Advertisement -

காலை நேரத்தில் பரபரப்பாக சமையலறையில் சமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு தான் அதில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன என்பது தெரியும் வேகமாக சமைக்கும் பொழுது ஏதாவது ஒரு பொருள் இல்லை என்றாலோ அல்லது அந்த பொருள் அழுகிப் போய் இருந்தாலும் அதனால் மிகவும் டென்ஷன் ஆகி அந்த டென்ஷனை குழந்தைகளின் மீதும் வீட்டில் இருப்பவர்கள் மீது காட்டுவார்கள் இப்படி டென்ஷன் ஆகாமல் எளிதில் சமைக்க கூடிய அளவிற்கு சில பொருட்களை நமக்கு ஏதுவாக வைத்துக் கொண்டால் காலையில் எந்தவித பரபரப்பும் இல்லாமல் ரிலாக்ஸ் ஆக சமைக்க முடியும் இப்படி சமைக்கும் சமையல் என்பது மிகவும் ருசியாகவும் இருக்கும் அந்த வகையில் பயனுள்ள சில வீட்டு குறிப்புகளை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்

இஞ்சி பூண்டு விழுது காலையில் சமைக்கும் பொழுது அரைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதற்கு முன்னதாகவே குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் பண்ணி வைக்கலாம் எப்படி தெரியுமா? நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ஒரு கிண்ணம் அளவிற்கு பூண்டு தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். அதே கிண்ணத்திற்கு முக்கால் பங்கு இஞ்சியை தோலை நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இறுக்கமாக மூடி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

- Advertisement -

எலுமிச்சை பழம் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது காய்ந்து விடும். அப்படி நீண்ட நாட்கள் காயாமல் இருப்பதற்கு எலுமிச்சை பழத்தில் தேங்காய் எண்ணையை தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். பச்சை மிளகாய் அழுங்கி போகாமல் பிரஷ்ஷாக இருப்பதற்கு அதனுடைய காம்புகளை நீக்கி பிளாஸ்டிக் டப்பா அல்லது சில்வர் டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

மசாலா பாக்கெட்டை பிரித்து விட்டு அப்படியே வைத்தால் ஏதாவது பூச்சிகள் வண்டுகள் வரும். அதற்கு ஒரு கத்தியை கேஸ் அடுப்பில் மிதமாக சூடு பண்ணி அந்த மசாலா பாக்கெட்டில் அந்த கத்தியை வைத்து பிரித்த பகுதியில் ஒரு கோடு போட்டால் அப்படியே மூடிவிடும். பூச்சிகள் எதுவும் சேராது தேவைப்படும் பொழுது அதை நறுக்கி அதிலிருந்து பொடியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சப்பாத்தி மாவு பிசையும் பொழுது முதலில் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு தடவிய பிறகு மாவை சேர்த்து பிசைந்தால் அந்த பாத்திரத்தில் மாவானது ஒட்டாமல் அழகாக பிசைய வரும். சப்பாத்தி சுட்ட பிறகு அப்படியே ஹாட் பாக்ஸில் வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தியானது தண்ணீர் விட்டது போல் இருக்கும். அதை தவிர்க்க அடியில் ஒரு இரும்பு கம்பி போல் வைத்துவிட்டு அதன் மேல் காட்டன் துணியை வைத்து அதன் உள்ளே சப்பாத்தி வைத்தால் நீண்ட நேரம் சூடாகவும் அடி சப்பாத்தி நன்றாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே அவசியமான சமையல் குறிப்புகள்

மேற்சொன்ன அனைத்து குறிப்புகளும் பலருக்கும் தெரியும் என்றாலும் புதிதாக சமைக்க ஆரம்பித்தவர்களுக்கு இந்த குறிப்புகள் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் தெரியாதவர்கள் இந்த குறிப்புகளை பயன்படுத்தி தங்களுடைய சமையலை எளிதாக்கிக் கொள்ளலாம்.

சற்று முன்