- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவபெருமானுக்கு பிடித்த மாலை

சிவபெருமானுக்கு பிடித்த மாலை

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்திற்கென்று சில மலர்களை வைத்து வழிபாடு செய்வோம். இதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மலர்கள் உகந்த மலர்களாக திகழ்கிறது. எந்த ஒரு ஆலயத்திற்கு சென்று நாம் வழிபடுவதாக இருந்தாலும் அந்த ஆலயத்திற்கு செல்லும் பொழுது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது என்றும், மலர்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புதமான மகத்துவம் மிகுந்த பொருளாக தான் மலர்கள் திகழ்கின்றன. இந்த ஆன்மீகம் குறித்த பதிவு சிவபெருமானுக்கு பிடித்தமான மலர்கள் எவை என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அழிக்கும் தொழிலை செய்யக்கூடிய கடவுளாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிபட்ட சிவபெருமானை இன்றைய காலத்தில் பலரும் வழிபட்டு வருகிறார்கள். சிவபெருமானுக்கு விசேஷமாக கருதக்கூடிய பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் போன்ற தினங்களில் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று நினைத்தால் எந்த மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக சிவபெருமானுக்கு அனைத்து விதமான மலர்களும் உகந்த மலர்கள்தான், என்றாலும் தாழம்பூ மட்டும் சிவாலயங்களில் சாற்றுவது கிடையாது. அதிலும் குறிப்பாக உத்தரகோசமங்கை என்னும் ஊரில் இருக்கக்கூடிய மங்களேஸ்வரர் என்னும் சிவபெருமானுக்கு மட்டும் தான் தாழம்பூவை வைத்து படைப்பார்கள். மற்ற கோவில்களில் மகாசிவராத்திரி அன்று மூன்றாவது கால பூஜையில் மட்டுமே தாழம்பூவை வைத்து வழிபாடு செய்வார்கள்.

இதற்கு காரணம் தாழம்பூ பிரம்மனின் பேச்சைக் கேட்டு சிவபெருமானிடம் பொய் கூறியதால் தாழம்புக்கு சிவபெருமான் கொடுத்த சாபமே. இதை தவிர்த்து மற்ற எந்த மலர்களாக இருந்தாலும் அந்த மலர்களை சிவபெருமானுக்கு சாற்றலாம். அதிலும் குறிப்பாக தும்பை பூ, மனோரஞ்சிதம், கொன்றை பூ, நீலோத்பவம் போன்ற மலர்களை மாலையாக சாற்றி வழிபாடு செய்தோம் என்றால் சிவபெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

சிவபெருமானுக்கு பூமாலை சாற்றுவதோடு பாமாலையும் சாற்றி வழிபட்டோம் என்றால் அதற்குரிய பலனே தனி சிறப்பாக இருக்கும். சிவனடியார்கள் பலரும் பூமாலை தருவதோடு பாமாலையும் சேர்த்து சிவபெருமானுக்கு சமர்ப்பித்தே பல வரங்களை பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக சோணசைல மாலை என்ற ஒரு மாலை இருக்கிறது. இது 100 பாடல்கள் கொண்ட பதிகமாகும்.

இந்த பாடல்களை பாடிக்கொண்டே திருவண்ணாமலை கிரிவலம் வருபவர்களுக்கு அண்ணாமலையாரின் பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் எந்த வேண்டுதலை நினைத்துக் கொண்டு கிரிவலம் மேற்கொள்கிறோமோ அந்த வேண்டுதல் விரைவிலேயே கைகூடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நம்மால் இயன்ற அளவிற்கு சிவபெருமானை நினைத்து சிவபெருமானுக்கு பூமாலை சாற்றுவதோடு அவருடைய பாமாலைகளையும் நமக்குத் தெரிந்த முறையில் பாடி வழிபட்டோம் என்றால் சிவபெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே அமாவாசையோடு வரும் வெள்ளிக்கிழமை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.

மிகவும் சக்தி வாய்ந்த மாலையாக கருதப்படக்கூடிய இந்த பூ மாலையையும் பாமாலையையும் இறைவனுக்கு சூட்டி இறைவனை மகிழ்வித்து அதன் மூலம் நாமும் பயன் பெறுவோம்.

சற்று முன்