- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதலைமை பொறுப்பை பெற முருகன் வழிபாடு

தலைமை பொறுப்பை பெற முருகன் வழிபாடு

- Advertisement -

வாழ்நாள் முழுவதும் ஒரு சிலர், ஒரே இடத்தில் அடிமையாகவே வேலை செய்வார்கள். ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வது அடிமைத்தனம் கிடையாது. ஆனால் அந்த முதலாளி சொல்வதற்கு எல்லாம் நாம் தலையை மட்டும் ஆட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தால் அது கட்டாயம் அடிமை என்ற வார்த்தையை தான் குறிக்கும்.

நாம் ஒரு இடத்தில் வேலை செய்தாலும், நம்முடைய கை உயர்ந்து இருக்க வேண்டும். நாம் சொல்லக்கூடிய விஷயங்களை, நம்முடைய உயர் அதிகாரிகள் செவி கொடுத்து கேட்க வேண்டும். நாமும் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்றால் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தலைமை பொறுப்பை பெற முருகன் அபிஷேகம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை செவ்வாழை பழம். முருகப்பெருமானுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது என்றால் பஞ்சாமிர்தம். அதிலும் செவ்வாழையில் செய்த பஞ்சாமிர்தம் ரொம்ப ரொம்ப சிறப்பு. செவ்வாழையோடு இன்னும் சில பல பழங்களை சேர்த்து, தேன் ஊற்றி நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்தால் பஞ்சாமிர்தம் தயார்.

வெறும் செவ்வாழை பழத்தை பிசைந்து கூட முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம் தவறு கிடையாது. இந்த பஞ்சாமிர்தத்தை கொண்டு வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் ஒரு முருகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். எந்த முருகர் கோவிலாக இருந்தாலும் சரி, இந்த பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்திற்கு கொடுத்து வேண்டுதல் வைத்தால் உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும்.

- Advertisement -

வாழ்க்கையில் அடுத்தவர்களிடம் கைகட்டி கையேந்தி நிற்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. நீங்கள் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் கூட அந்த சம்பளத்தை கௌரவமாக வாழ்வீர்கள் வாங்குவீர்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய முருகன் கோவிலில் தினமும் அபிஷேக ஆராதனை நடக்கும். அந்த அபிஷேகத்திற்கு இந்த பஞ்சாமிர்தத்தை நீங்கள் தயார் செய்து கொடுங்கள் அவ்வளவுதான்.

நிறைய இடத்தில் இப்போது டாமினேஷன் அதிகமாக இருக்கிறது. போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. நம்மை உயரவே விட மாட்டார்கள். தாழ்த்தி தாழ்த்தி வைத்து இருக்கின்ற நிலையிலே வைத்திருப்பார்கள். நமக்கு மேல் அதிகாரிகளாக மாறுவதற்கு தகுதி இருக்கும். ஆனால் அந்த பதவியை எட்டிப் பிடிக்கவே முடியாது.

- Advertisement -

எவ்வளவு முயற்சி செய்தும் தோற்றுப் போய் கீழ் மட்டத்திலேயே இருப்போம். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் முருகப்பெருமானை நினைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொடர்ந்து 5 வாரங்கள் இந்த வழிபாட்டை செய்யவும். உங்களால் முடிந்தால் செவ்வாழைப்பழத்தை வாங்கி யாசகம் கேட்பவர்களுக்கு ஒவ்வொரு வாழைப்பழமாக தானம் கொடுங்கள். அதுவும் சிறப்பான பலனை கொடுக்கும்.

உங்களுடைய வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்கிறீர்கள், முருகன் சிலை இருக்கிறது எனும் பட்சத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் இந்த செவ்வாழை பழத்தை கொண்டு அந்த வேலுக்கோ அல்லது முருகனுக்கோ அபிஷேகம் செய்து வழிபாடு செய்தாலும் ரொம்ப ரொம்ப நல்லது தான்.

இதையும் படிக்கலாமே: மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய ஆஞ்சநேயர் வழிபாடு

அதையும் நீங்கள் வாரம் தோறும் உங்களுடைய வீட்டில் பின்பற்றிக் கொள்ளுங்கள். செவ்வாழை முருகப்பெருமானுக்கு ரொம்ப ரொம்ப உகந்த பழம். இந்த வழிபாட்டை  முயற்சி செய்து பாருங்கள். மேல் சொன்ன வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்