ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து செயலுக்கும் நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றனர். இந்த நவகிரகங்கள் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. நம்முடைய கர்ம வினைகள் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் கஷ்டப்படுவோம். நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய குறைய நம்முடைய கஷ்டங்களும் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றமான அமைதியான சந்தோஷமான வாழ்க்கை அமையும். அப்படிப்பட்ட ஒரு தான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நவக்கிரகம் வழிபாடு
கர்ம வினைகள் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு நல்ல செயல்களை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பிறரின் பசி அறிந்து அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். அந்த தானம் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய தானமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வாயில்லா ஜீவன்களுக்கு தானம் தருவது இன்னும் பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. வாயில்லா ஜீவன்களுக்கு நாம் தொடர்ச்சியாக உணவளித்தோம் என்றால் நம்மை பார்க்கும் பொழுதெல்லாம் அவை நன்றி பாராட்டும்.
அதனால்தான் பல தெய்வங்கள் வாயில்லா ஜீவன்களையே தங்களுடைய வாகனங்களாக ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் கோமாதா என்று கூறக்கூடிய அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய பசுவிற்கு நாம் எந்த பொருட்களை தானமாக தந்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய போராட்டம் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
நவகிரகங்களின் பாதிப்பால் தான் நமக்கு ஒவ்வொரு பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது நன்றாகவே தெரியும். அப்பொழுது நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து நாம் வெளிவர வேண்டும். அப்படி வெளிவர வேண்டும் என்றால் நவகிரகங்களுக்குரிய தானியங்களை தானமாக தர வேண்டும். ஒரு கிரகம் மட்டும் நமக்கு சரியில்லை என்றால் அந்த கிரகத்திற்குரிய தானியத்தை வாங்கி தரலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கை நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்றால் நவகிரகங்களும் நமக்கு நன்மையாக இருக்க வேண்டும். அதனால் நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை வாங்கி தர வேண்டும்.
நவகிரகங்களுக்குரிய தானியமான கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பச்சைப் பயிறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை பயிறு, எள், உளுந்து, கொள்ளு இவை அனைத்தையும் தலா ஒரு கிலோ என்று வாங்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கிலோ அளவிற்கு வெள்ளத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து உலர வைத்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது வெள்ளத்தை நன்றாக இடித்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அது நன்றாக கரைந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி இந்த மாவுடன் சேர்த்து நன்றாக பிணைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைப்பட இதை நீங்கள் செய்ய வேண்டும். இப்படி உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு தினமும் காலையில் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு ஒவ்வொரு உருண்டையாக உங்க கையால் நீங்கள் தர வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் நவகிரகங்களின் பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். மேலும் பசுமாட்டில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்பதால் அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். விருப்பம் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் இதை தரலாம்.
இதையும் படிக்கலாமே: செல்வம் சேர வியாழக்கிழமை வழிபாடு
மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த பரிகாரமாக திகழக்கூடிய இந்த பரிகாரத்தை முழு மனதுடன் சந்தோஷத்துடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய போராட்டங்கள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.