- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை அஷ்டமி வாராஹி வழிபாடு

வளர்பிறை அஷ்டமி வாராஹி வழிபாடு

- Advertisement -

அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியவர் பைரவர் தான் என்றாலும் அஷ்டமி தினத்தில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி என்பதால் அதற்கு இன்னும் சிறப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த அஷ்டமி திதியானது நாளை தொடங்கப் போகிறது. நாளைய தினத்தில் வாராகி அம்மனுக்கு எந்த நேரத்தில் தீபம் ஏற்றி எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாகவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதனால் வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரம் என்பது மிகவும் விசேஷமாகவே இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளோ மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை செய்யலாம். அப்படி இந்த இரண்டு நேரங்களும் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இரவு 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் மிளகை போட்டு தட்டு முழுவதும் பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அந்த நாணயத்திற்கு மேலாக ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

பிறகு வாராஹி அம்மனுக்கு கருப்பு சுண்டல், மிளகு வடை, மிளகு சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம். பழங்கள் வைப்பவர்களாக இருந்தால் பலாப்பழம், செவ்வாழை, ஆரஞ்சு போன்ற பழ வகைகளை வைக்கலாம். நாளை சனிக்கிழமை என்பதால் வாராகி அம்மனுக்கு துளசி மாலையும் ஏலக்காய் மாலையும் சாற்றுவது மிகவும் சிறப்பு. இவை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு வாராகி அம்மனின் இந்த மந்திரத்தை முழுமனதோடு தங்களால் இயன்ற அளவு கூறி வர வாராஹி அம்மனின் அருளால் நன்மைகள் நடைபெறும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் மஹிஷாரூடாயை வித்மஹே
தண்டஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராகி ப்ரசோதயாத்

அதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் சனிக்கிழமை என்பதால் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் அஷ்டமி என்பதால் பைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் நல்ல பலன்களை தரும். மறுநாள் காலை மிளகை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒரு ரூபாயை எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே தங்கம் சேர துளசி இலை பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வளர்பிறை அஷ்டமி வழிபாட்டை முழு மனதுடன் வாராகி அம்மனை நினைத்து செய்ய வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சற்று முன்