ஒவ்வொரு தெய்வத்திற்கும் வழிபாட்டு முறை என்பது சற்று வேறுபாடாக இருக்கும். அப்படிப்பட்ட வேறுபாட்டை உணர்ந்து அதற்கேற்றார் போல் எந்த தெய்வத்தை நாம் வழிபடுகின்றோமோ அதற்கு ஏற்றார் போல் நாம் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். நம்முடைய வேண்டுதல் என்னவோ அதற்கேற்றார் போல் தான் நாம் தெய்வங்களை வழிபாடு செய்வோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைத்தால் அதற்குரிய தெய்வமான மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். அதேபோல் கல்வி தொடர்பான வேண்டுதலுக்கு சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வோம். எதிரிகள் அற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வோம். இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புதமான சக்தி கொண்டதாக திகழ்வதுதான் பணம். இந்த பணத்தை நாம் எந்த அளவிற்கு வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு மரியாதை அதிகரிக்கும். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்றால் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி தாயாரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த மகாலட்சுமி தாயார் தான் அஷ்டலட்சுமிகளாக வீற்றிருக்கிறார். அந்த அஷ்டலட்சுமிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தரக்கூடியவர்களாக தான் அஷ்டலஷ்மிகள் விளங்குகிறார்கள்.
அதனால் தான் மகாலட்சுமி தாயாரை வழிபட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று பலரும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்றால் சில விசயங்களை நாம் கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும்.
எந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைக்கும். மேலும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் வாசம் அந்த வீட்டிற்கு ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி வைத்துவிட்டு நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பாடலை பாடி அந்த அம்மனை வழிபாடு செய்தோம் என்றால் அந்த பாடலைக் கேட்பதற்காகவே அந்த அம்மன் ஓடோடி வந்து விடுவாள் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக மகாலட்சுமி அஷ்டோத்திரம் என்று இருக்கிறது. அந்த அஷ்டோத்திரத்தை யார் ஒருவர் முழு மனதுடன் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு அஷ்டலட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது மாதம் ஆடி மாதம் இந்த மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை நாம் ஆரம்பித்தோம் என்றால் தொடர்ந்து 48 நாட்கள் செய்து வருவதன் மூலம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளை நம்மால் பெற முடியும் என்று தான் கூற வேண்டும்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக தனியாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருப்பது மிகவும் சிறப்பு. பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டையை நெய்வேத்தியமாக வைத்து மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இப்படி தினமும் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த முறையில் அஷ்டோத்திரம் பாடி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி அஷ்டோத்திரம் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் “வரலட்சுமி வரலட்சுமி வரலட்சுமி” என்று தங்களால் இயன்ற அளவு குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு வந்து நமக்கு பரிபூரணமான அருளை தருவாள்.
இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் தீப வழிபாடு
முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரின் இந்த பெயரை கூறி வழிபடுவதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வருவதோடு மட்டுமல்லாமல் நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்குவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.