- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்பு உயர ஆடி பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது

செல்வ செழிப்பு உயர ஆடி பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது

- Advertisement -

பொதுவாக ஏதாவது ஒரு விசேஷ நாட்கள் என்று வந்தால் அந்த நாட்களில் வீட்டில் வழிபாடு செய்வது என்பது அனைவரின் வழக்கமே. அதேபோல் சில பண்டிகைகளுக்கு உடன் பிறந்தவர்களின் இல்லத்திற்கு அல்லது தாயாரின் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் சேர்ந்த அந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்வதும் இன்றளவும் பலரும் கடைப்பிடித்து வரும் ஒரு வழிமுறையாகவே இருக்கிறது. இதே போல் ஒரு வழிமுறையை நாம் ஆடி பௌர்ணமி தினத்தன்று செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்பு உயர ஆடி பௌர்ணமி

ஒவ்வொரு வீட்டிலும் தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் என்ற சொந்தங்கள் இருக்கும். அன்றைய காலத்தில் அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவும் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தனித்தனியாக வாழ்ந்து இருந்தால் கூட பரவாயில்லை, பார்க்கும் பொழுது பேசிக் கொள்ளலாம். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் மனக்கசப்புடன் பேசாமல் இருக்கிறார்கள். அப்படி சண்டையிட்டு பேசாமல் இருப்பவர்கள் கூட இந்த ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று உடன் பிறந்த பிறந்தவர்களை வீட்டிற்கு அழைத்து தங்களால் இயன்ற சீர் வரிசையை தருவதன் மூலம் அவர்களின் செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. இதைத்தான் ஆடி சீர்வரிசை என்று கூறுவார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய ஆண்மகன் அதாவது குடும்பத் தலைவன் தன் உடன் பிறந்த சகோதரியை வீட்டிற்கு ஆடி பௌர்ணமி தினத்தன்று அழைத்து வந்து இரவு பௌர்ணமி தினத்தில் ஒன்றாக சேர்ந்து சந்திர வழிபாடு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அதற்குப் பிறகு தங்களால் இயன்ற சீர்வரிசையை சகோதரிகளுக்கு தந்து தங்களுடைய வாரிசுகளை ஆசீர்வாதம் வாங்க செய்ய சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சீர்வரிசை கொடுத்தவர்களுக்கும் செல்வ வளம் அதிகரிக்கும். சீர்வரிசை பெற்றவர்களுக்கும் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பௌர்ணமி அன்று இரவு மொட்டை மாடியில் அதாவது நிலவு வெளிச்சத்தில் கற்கண்டு பொங்கல் செய்து நிலவை மகாலட்சுமியாக பாவித்து மகாலட்சுமியின் பாடல்களை நிலவைப் பார்த்து பாடி அந்த கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து அதையே பிரசாதமாக உண்டு வருவதன் மூலமும் அதே சமயம் வீட்டில் பிறந்த பெண்களுக்கு தங்களால் இயன்ற ஆடை அணிகலன்களை வாங்கி தருவதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைக்கும்.

- Advertisement -

இப்படி சீர்வரிசை வாங்கிய சகோதரிகளும் தங்களுடைய சகோதரருக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை திருப்பித் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக கடனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் நோய் நொடிகளால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் இந்த ஒரு சிறிய ஆடி சீர்வரிசையை தன் உடன் பிறந்த சகோதரிக்கு செய்வதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கன்னியாதானம் செய்வதால் ஏழு ஜென்ம பாவம் தீரும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பெண்களைப் பெற்ற தகப்பன்மார்கள் தங்களுடைய பெண்களை திருமணம் செய்து தரும்பொழுது கன்னியாதானம் செய்து தருவார்கள். அப்படி கன்னியாதானம் செய்யும் பொழுது அவர்கள் செய்த ஏழு ஜென்ம பாவங்களும் நீங்குமாம். அதனால் தான் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த பெண் குழந்தையை மகாலட்சுமி என்று கூறுகிறார்கள்.

அப்படிப்பட்ட பெண் குழந்தைக்கு வருடா வருடம் தங்களால் இயன்ற அளவு ஏதாவது பொருளை சீர்வரிசையாக தர வேண்டும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த ஐதீகத்தை தொடர்ச்சியாக தாய் தந்தைக்குப் பிறகு சகோதரர்கள் செய்து வருவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே :ஆடி ஞாயிறு சிறப்புகள்
தீராத பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு இந்த பௌர்ணமி தினத்தில் எளிமையான முறையில் ஏதாவது ஒரு சீர்வரிசையை செய்து கொடுத்து தங்களுடைய கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்