- Advertisement -

கடன் தீர ஆலமர பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. கடன் என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டாலேயே பிரச்சனை என்பதும் கூடவே சேர்ந்து வந்துவிடும். வீட்டிலும் சரி வருமானத்திலும் சரி செலவு செய்யும் பொழுதும் சரி இப்படி எதுவாக இருந்தாலும் அவை அனைத்திலும் இந்த கடன் என்ற ஒன்று உள்ளே நுழைந்து நமக்கு பிரச்சனைகளை கொடுக்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்றால் கடனும் நீங்க வேண்டும். அப்படி கடன் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பல பரிகாரங்களை செய்திருந்தாலும் ஆலமரத்தடியில் செய்யக்கூடிய இந்த ஒரு பரிகாரம் மிகவும் நல்ல பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இந்த ஆலமரத்தடியில் செய்யக்கூடிய நவகிரக பரிகாரங்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர ஆலமர பரிகாரம்

ஒருவருக்கு நோயோ, கடனோ, பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும் நவகிரகங்களால் தான் ஏற்படும். அந்த நவகிரகங்களுக்குரிய பரிகாரங்களை நாம் செய்யும்பொழுது தான் அந்த பிரச்சனையிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும். இந்த நவகிரக பரிகாரத்தை எங்கு சென்று செய்வது எப்படி செய்வது அதற்கென்று செலவுகள் அதிகமாகும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆலமரத்தடியில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது நவகிரகங்களின் அருளால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். யார் செய்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து செய்வது என்பது சிறப்பு. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒன்பது சோழிகள் வேண்டும். அதேபோல் 9 நிறத்தில் துணிகள் வேண்டும். நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் உகந்த துணிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். சூரியனுக்கும், செவ்வாய்க்கும் சிவப்பு நிற துணி. சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் வெள்ளை நிற துணி. குருவிற்கு மஞ்சள் நிற துணி, சனிக்கு கருப்பு நிற துணி, ராகுவிற்கு நீல நிறத்துணி, கேதுவிற்கு பல வண்ண நிறத்தில் இருக்கக்கூடிய துணி. புத பகவானுக்கு பச்சை நிற துணி என்று துணிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு துணிக்குள்ளும் ஒவ்வொரு சோழியை வைத்து முடிஞ்சு போட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் இருந்தே ஒரு பாட்டிலில் தண்ணீரும் வெல்லத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். பக்கத்தில் இருக்கும் ஆலமரத்திற்கு சென்று அந்த மரத்தடியில் வெல்லத்தைப் போட்டு தண்ணீரை ஊற்றி விட வேண்டும். அடுத்ததாக அந்த ஆலமரத்தில் தொங்கக்கூடிய விழுதுகளில் நாம் எடுத்து சென்ற 9 துணிகளையும் கட்டி விட வேண்டும்.

- Advertisement -

ஒரே விழுதில் ஒன்பது துணிகளையும் கட்டலாம் அல்லது ஒவ்வொரு விழுதிலும் ஒவ்வொரு துணி என்று கூட நாம் கட்டலாம். இவ்வாறு கட்டிவிட்டு ஆலமரத்தடியில் அமர்ந்து உங்களுடைய கடன் பிரச்சினைகள் தீர வேண்டும், மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஆலமரத்தில் வீரபத்திரர் குடியிருப்பதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அவர் நாம் என்ன வேண்டுதல் வைக்கிறோம் என்பதை காது கொடுத்து கேட்பாராம். அவரிடம் நாம் இப்படி வேண்டுதல் வைக்கும் பொழுது விரைவிலேயே அந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றி விடுவார் என்று கூறப்படுகிறது

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர திங்கட்கிழமை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த ஆலமரத்தடி நவகிரக பரிகாரத்தை மாதத்திற்கு ஒருமுறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது விரைவிலேயே அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்