இன்று ஆடி மாதத்தில் வந்திருக்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் சங்கடங்கள் விலக வேண்டும் என்றால், அனைவரும் கணபதியை வழிபாடு செய்ய வேண்டும். விக்ணங்களை தீர்க்கக்கூடிய விநாயகருக்கு தான் இன்று முதல் வழிபாடு. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி விநாயகரை வணங்கினாலும் உங்களுடைய முயற்சிகளில் வரக்கூடிய தடைகள் நீங்கும். சங்கடம் விலகும்.
வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும். இன்றைய தினம் எல்லோரும் விநாயகரை ஒரு நிமிடமாவது நினைத்து வழிபாடு செய்யுங்கள். அதனுடன் சேர்ந்து இன்று மாலை நிலவு உதயம் ஆன பிறகு, அதாவது கொஞ்சம் இருட்டிய பிறகு, மாலை 6:30 மணிக்கு மேல் பின் செல்லக் கூடிய வழிபாட்டை செய்தால் லட்சுமி கணபதி உங்களுக்கு லட்ச லட்சமாக பணத்தை வாரி கொடுப்பார். அந்த வழிபாட்டைப் பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோமா.
இன்று செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விநாயகரது திருவுருவப்படம் கட்டாயம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இருக்கும். அந்த விநாயகருக்கு அருகம்புல் வைத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு இன்று அருகம்புல் சூட்டுவது ரொம்ப ரொம்ப நல்லது.
விநாயகர் மனம் மகிழ்ந்து உங்களுக்கு தேவையான வரங்களை உடனே கொடுத்து விடுவார். உங்களுடைய உள்ளங்கைகளில் கொஞ்சமாக அருகம்புல், 1 ஸ்பூன் வெந்தயம், 1 துண்டு பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருட்களையும் வைத்து, உள்ளங்கைகளை மூடி கொள்ளுங்கள். உங்களுக்கு 16 வகையான செல்வங்களும் அளவில்லாமல் கிடைக்க வேண்டும், நிறைவான மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று விநாயகரிடம் வரங்களை கேட்கலாம்.
உங்களுடைய வீட்டின் வறுமை நிலை நீங்கி செல்வநிலை உயர என்ன தேவையோ அதை நீங்கள் பிரார்த்தனையாக வைத்துக் கொள்ளுங்கள். கையில் இருக்கும் மூன்று பொருட்கள் அப்படியே இருக்கட்டும். பிரார்த்தனையை முடித்துவிட்டு பின் சொல்லக் கூடிய மந்திரத்தை கண்களை மூடி 108 முறை மனதார உச்சரியங்கள்.
கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி கணபதிம்
பாதபத்மம் பஜேஹம்
குறைந்தபட்சம் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். அதிகபட்சம் இத்தனை முறைதான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. எத்தனை முறை இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு லட்சுமி கணபதியின் அருள் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உள்ளங்கைகளில் வைத்திருக்கும் மூன்று பொருட்களுக்கும் உண்டான சக்தி அதிகரிக்கும்.
மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு இந்த மூன்று பொருட்களையும் ஒரு வெள்ளை காகிதத்தில் வைத்து மடித்து அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அடுத்த மாதம் சங்கடஹர சதுர்த்தி வரை இந்த பொருட்கள் அப்படியே இருக்கட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். கடன் சுமைக்குறையும். வருமானம் பெருகும்.
இதையும் படிக்கலாமே: தங்கமும் வெள்ளியும் தாராளமாக சேர பரிகாரம்
லட்சுமி கணபதியின் ஆசிர்வாதத்தால் உங்களுடைய வீட்டில் நிறைய நல்லது நடப்பதை உணர்வீர்கள். இந்த எளிமையான பரிகாரத்தை இன்று நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் லட்சுமி கணபதியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.